- Home
- Cinema
- நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இந்த மாதம் திருமணமா? கல்யாணத்திற்கு பின் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுக்கிறாரா?
நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இந்த மாதம் திருமணமா? கல்யாணத்திற்கு பின் இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை எடுக்கிறாரா?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பெரிய பட்ஜெட் படங்களை தன் கை வசம் வைத்திருந்தாலும், திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலக உள்ளதாக ஒரு தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது.

பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக இவர் கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இவர் நிச்சயதார்த்தம் குறித்து பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து, விரைவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு பின், நயன்தாரா திரையுலகை விட்டு விலக உள்ளதாகவும் யூகங்கள் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் நயன்தாரா வரும் டிசம்பர் மாதத்திலோ, அல்லது 2022 ஆம் ஆண்டில் தொடக்கத்திலோ திருமண வாழ்க்கையில் இணைவார் என கூறப்படுகிறது. தற்போது இவர் இயக்குனர் அட்லீயின் பான் இந்தியா படமாக உருவாகி வரும், படத்தில் படப்பிடிப்பிற்காக பூனேவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்திவிட்டு, மற்ற வேலைகளை முன்னெடுக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தாலும் இதுகுறித்து, நயன்தாரா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
தற்போது நயன்தாரா, சுமார் 6 வருடத்திற்கு பின்னர்... மீண்டும் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி - சமந்தா நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல் ' படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஜினிகாந்த் , மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப் ஆகிய நட்சத்திர பட்டாளங்களுடன் இணைத்து நயன்தாரா அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். அதே போல் சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர் என்ற படத்திலும், பிருத்விராஜ் சுகுமாரனுடன் ஒரு மலையாளப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.