- Home
- Cinema
- Nayanthara : அழகுக்கு அழகு சேர்க்க புது அவதாரம் எடுத்த நயன்தாரா.... என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா?
Nayanthara : அழகுக்கு அழகு சேர்க்க புது அவதாரம் எடுத்த நயன்தாரா.... என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா?
நடிகை நயன்தாரா, ரவுடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதுதவிர சாய் வாலா என்கிற டீ கம்பெனியிலும் அவர் பார்ட்னராக உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவ்வாறு நடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாரா, சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார்.
அந்த வகையில், இவரும், இவரது காதலன் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதுதவிர சாய் வாலா என்கிற டீ கம்பெனியிலும் நயன்தாரா பார்ட்னராக உள்ளார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா, தற்போது மேலும் ஒரு தொழில் தொடங்கி உள்ளார். ‘தி லிப் பாம் கம்பெனி’ என்கிற பிராண்ட் மூலம் அழகு சாதன பொருள் தயாரிப்பில் அடியெடுத்து வைத்துள்ளார்.
பிரபல தோல் மருத்துவரான ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து நயன்தாரா இந்த நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்நிறுவனம், நூற்றுக்கணக்கான வகைகளில் லிப் பாம்களை வழங்கி சிறப்பிக்கவுள்ளது.
இதை அறிமுகப்படுத்தும் விதமாக விதவிதமான லிப் பாம் அணிந்தபடி மாடர்ன் உடையில் நயன்தாரா போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.