ஹிந்தியில் ரீமேக் ஆகும் நயன்தாரா மூவி..யார் தயாரிப்பில் தெரியுமா?
ராக்கி இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாகவும் படத்தின் உரிமையை "வாக்கோ பிலிம்ஸ்" பெற்றிருப்பதாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றது.

rocky movie
அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ள ராக்கி படத்தில் நடிகர் வசந்த் ரவி நடித்துள்ளார். இவர் ராம் இயக்கிய தரமணி படத்தில் நடித்தவர். இவருடன் ரோகினி, பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
rocky movie
இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடிபேபி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரிலீஸ் செயதுள்ள இந்த படத்தின் வேலைகள் கடந்த 2 வருடங்களாக நடந்து வந்தது.
rocky movie
முன்னதாக வெளியான இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. படம் குறித்த எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.
rocky movie
கிருஸ்துமஸ் விருந்தாக கடந்த 23-ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த படக்குழுவை அழைத்து வெகுவாக பாராட்டியிருந்தார்.
rocky movie
சிறையில் இருந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் வரும் நாயகன் தன குடும்பத்தை தேடுகிறார். அதில் அம்மா கொல்லப்பட்டதை அறிந்த நாயகன் தன தங்கையை தேடுவதே படத்தின் கதை.
rocky movie
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டாக வெளியாகாமல் இருந்த இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வந்தது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது.
rocky movie
படம் வெளியாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் படம் ஓடிடிக்கு வருவது குறித்து என தகவலும் வராததால் படம் விலை போகவில்லை என கூறப்படுகிறது.
rocky movie
இந்நிலையில் ராக்கி படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாகவும் படத்தின் உரிமையை "வாக்கோ பிலிம்ஸ்" பெற்றிருப்பதாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றது.