- Home
- Cinema
- அஜித், கமல் வழியில் நயன்தாரா; லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்: நயன்தாரா வேண்டுகோள்!
அஜித், கமல் வழியில் நயன்தாரா; லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்: நயன்தாரா வேண்டுகோள்!
Nayanthara Rejects Lady SuperStar Title : லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Nayanthara Rejects Lady SuperStar Title : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சினிமாவைப் பொறுத்த வரையில் நடிகர், நடிகைகளுக்கு புனைப்பெயர் கொடுப்பது வழக்கம். அப்படி கொடுக்கப்படும் புனைப்பெயரை வைத்தே நடிகர் நடிகைகள் அழைக்கப்படுவார்கள். உதாரணத்திற்கு இளைய தளபதி விஜய்யை, இப்போது தளபதி விஜய் என்றே அழைக்கிறார்கள். உலகநாயகன் கமல் ஹாசனை இப்போது கமல் ஹாசன் என்றே அழைக்கிறார்கள்.
Nayanthara Rejects Lady SuperStar Title
தல அஜித்தை இப்போது ஏகே அல்லது அஜித் குமார் என்று அழைக்கிறோம். கடவுளே அஜித் என்று ரசிகர்கள் அழைத்த நிலையில் கடவுளே என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளார். இதே போன்று கமல் ஹாசனும் தன்னை உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது நயன் தாராவும் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். ஏன் அப்படி வேண்டாம் என்று சொல்கிறார்? என்ன காரணம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
Nayanthara Statement Regarding Lady Superstar
தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது வழக்கம். இனிமேல் தன்னை நயன்தாரா என்று அழைத்தாலே போதும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
Nayanthara Rejects Lady SuperStar Title
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு நடிகையாக வெற்றி மற்றும் மகிழ்ச்சியின் இந்த பாதைக்கான அனைத்து ஆதாரங்களுக்கும் நன்றி. என்னுடைய வாழ்க்கை திறந்த புத்தமாக இருந்திருக்கிறது. எனது வெற்றியில் உங்களது பங்கும் முக்கியமானது. என்னை உங்களது தோளில் சாய்த்து பாராட்டியதோடு, இக்கட்டான சூழலிலும் என்னை நீங்கள் தூக்கி நிறுத்தவும் செய்திருக்கிறீர்கள்.
Nayanthara Said That Dont Call me as a Lady Superstar
என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வந்தீர்கள். உங்களது அன்பு மற்றும் ஆதரவின் மூலமாக கிடைத்த இந்த பட்டத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இனி வரும் காலங்களில் என்னை நயன் தாரா என்று அழைத்தால் போதும். ஒரு நடிகைக்கு பட்டமும் விருதுகளும் முக்கியம் தான்.
Nayanthara Rejects Lady SuperStar Title
என்றாலும் கூட என் பெயர் தான் எனக்கு எப்போதும் நெருக்கமான ஒன்று. எப்போது உங்களுக்கான மகிழ்ச்சியில் என்னுடைய கடின உழைப்பு இருக்கும். நம்மை இணைப்பது சினிமா தான். அதனை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டே இருப்போம். அன்பு, மரியாதை மற்றும் நன்றிடன் நயன்தாரா என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.