மெல்லிய வெள்ளை சட்டையில் மார்டன் தேவதையாய் நயன்தாரா... அட்டை படத்திற்காக நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!
First Published Dec 4, 2020, 7:37 PM IST
ஆர்ப்பாட்டம் இல்லாத மேக்கப், வெள்ளை நிற சட்டையில் லேசான புன்னகையுடன் நயன் கொடுத்துள்ள போஸ் அட்டை படத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. 2-வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, வந்த வேகத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக உயர்ந்தார்.

காதல் விவகாரத்தில் சிக்கிவிட்டாலே எல்லாம் முடிந்தது என்ற தமிழ் சினிமாவின் வழக்கத்தை மாற்றி இரண்டு முறை காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் விழுந்ததை விட வேகமாக எழுந்து நின்றார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?