பணத்துக்கு ஆசைப்பட்டு என் புருஷனை பிரித்துவிட்டார்- நடிகை பவித்ரா லோகேஷ் மீது நரேஷின் 3-வது மனைவி பகீர் புகார்
Naresh pavithra lokesh : நடிகை பவித்ரா லோகேஷ், தானும் நரேஷும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகவும், தங்களுக்கு எந்த வித உறவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபு, சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை மூன்று முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அதில் இருவரை விவாகரத்து செய்த நரேஷ் பாபு, மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட ரம்யா ரகுபதி என்பவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் விவாகரத்து கோரி கோர்ட்டில் விண்ணப்பித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்... அவர் வில்லன்னா அப்போ நான் எதுக்கு... விஜய் சேதுபதி வருகையால் புஷ்பா 2-வில் இருந்து விலகினாரா பகத் பாசில்?
இதனிடையே நடிகர் நரேஷ் பாபு, அடுத்த திருமணத்துக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அவர் கன்னட திரைப்பட நடிகை பவித்ரா லோகேஷை 4-வது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகின. நடிகை பவித்ரா லோகேஷும் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தானவர்.
இதையும் படியுங்கள்... பிகினி உடையில் படு ஹாட்.. மொத்த அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த யாஷிகா!! கண்ணை கட்டும் போட்டோஸ்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மைசூருவில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் நடிகர் நரேஷ் பாபுவும், நடிகை பவித்ரா லோகேஷும் ஒன்றாக வசித்து வந்ததை அறிந்த நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்று அவர்களை செருப்பால் அடிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... ஜெபமலராய் புன்னகையை தெறிக்கவிடும் பிரியா பவானி ஷங்கர்... 'யானை' ஷூட்டிங் அன்சீன் போடோஸில் அவ்வளவு அழகு!!
இந்நிலையில், நடிகை பவித்ரா மீது நரேஷ் பாபு மனைவி ரம்யா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். தனது மாமியாரின் வைர நெக்லஸை தான் பவித்ரா அணிந்திருப்பதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு தான் அவர் நரேஷை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் நடிகை பவித்ரா லோகேஷ், தானும் நரேஷும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகவும், தங்களுக்கு எந்த வித உறவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.