MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!

சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!

Naga Chaitanya Thandel Box Office Collection Day 10 Report : சோபிதா துலிபாலாவை திருமணம் செய்த நேரம் தண்டேல் ரூ.100 கோடி வசூல் குவித்து நாக சைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய வெற்றி படமாக அமைந்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 17 2025, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தண்டேல் திரைப்படம்

தண்டேல் திரைப்படம்

Naga Chaitanya Thandel Box Office Collection Day 10 Report : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நாக சைதன்யா கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி சோபிதா துலிபாலாவை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமணம் ஆவணப்படமாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், சோபிதா நாக சைதன்யாவின் திருமண ஆவணப்படத்திற்கு நெட்பிளிக்ஸ் ரூ.50 கோடி வரையில் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சாய் பல்லவி, நாக சைதன்யா

சாய் பல்லவி, நாக சைதன்யா

எனினு, இப்போது சோபிதா வந்த நேரம், அவர் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த ராசி நாக சைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தண்டேல் படம் உருவாக்கியிருக்கிறது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் உருவான தண்டேல் படம் பிப்ரவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான தண்டேல் படம் சைதன்யாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. சந்து மொண்டேடி இயக்கத்தில், அல்லு அரவிந்த், பன்னி வாசு தயாரித்த இந்தப் படம் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ளது.

35
சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!

சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!

இன்னும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. தண்டேல் அரிய சாதனையைப் படைத்துள்ளது. நாக சைதன்யாவை முன்னணி நடிகர்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது. இந்தப் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வாரம் முடியும் முன்பே, வெளிநாடுகளில் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.10 கோடி) வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

45
சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!

சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!

நாக சைதன்யாவின் கடின உழைப்பு, அற்புதமான நடிப்பு, சாய் பல்லவியின் மயக்கும் நடிப்பு, நடனம், வலுவான கதை, மீனவர்களின் யதார்த்த வாழ்க்கை, இசை, தயாரிப்பு மதிப்பு ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன. இயக்குனர் சந்து மொண்டேடி படத்தை உணர்ச்சிபூர்வமாகக் கையாண்ட விதம் படத்தின் சிறப்பம்சமாகும். கிளைமாக்ஸ் முக்கிய பங்கு வகித்தது. படத்தைப் பெரிய வெற்றிப் படமாக்கியது என்று சொல்லலாம்.தண்டேல் படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் கடந்த நிலையில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக பாக்ஸ் ஆபிஸில் கர்ஜித்து வருகிறது. இதுவரையில் எந்தப் படமும் நாக சைதன்யாவிற்கு ரூ.100 கோடி வசூல் குவிக்கவில்லை.

55
சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!

சோபிதாவை திருமணம் செய்த ராசி; ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்த நாக சைதன்யாவின் தண்டேல்!

முதல் முறையாக நாக சைதன்யாவின் இந்தப் படம் ரூ.100 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற சாதனையை அவருக்கு பெற்று கொடுத்துள்ளது. இப்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்த நேரம் என்று சொல்லும் அளவிற்கு தண்டேல் ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே தண்டேல் வெற்றிக்கு தன்னுடைய மருமகள் சோபிதா துலிபாலா வந்த நேரம் என்று அவருக்கு நாகர்ஜூனா பாராட்டு தெரிவித்திருந்தார். 

இந்தப் படத்திற்கு நாக சைதன்யாவிற்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரையில் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று சாய் பல்லவிக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இருவரும் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படம் கூட ரூ.60 கோடி வரையில் தான் வசூல் குவித்திருந்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
நாக சைதன்யா
சாய் பல்லவி
சோபிதா துலிபாலா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved