அப்படி ஒரு நட்பே வேண்டாம்..! வாயை விட்டு சிக்கிய சமந்தா... அசால்டாக அசிங்கப்படுத்திய நாகசைதன்யா!
விவாகரத்து பெற்ற பின்னரும் நட்பாக பழகலாம் என சமந்தா கூறிய கருத்தை நிராகரிப்பது போல், நாக சைதன்யா பேசிய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமணம் கோவாவில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். மேலும் சமந்தா நாக சைதன்யா திருமணம், நாகச்சைதன்யா குடும்ப வழக்கப்படி ஹிந்து முறை படியும், சமந்தாவின் குடும்ப வழக்கத்தின்படி கிறிஸ்தவ முறைப்படியும் நடந்தது.
சரத்பாபு நலமுடன் உள்ளார்..! வதந்திகளை நம்ப வேண்டாம் சகோதரி உருக்கமான வேண்டுகோள்..!
திருமணத்திற்கு பின்னர், தொடர்ந்து நடிகை சமந்தா திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற பிரபலங்கள் பார்த்து பொறாமைப்படும் விதமாக, குடும்பம் - கணவர் என அனைவரையும் அனுசரித்து சென்றார். எனவே இவரை பார்த்து பொறாமை படாத பிரபலன்களே இல்லை என்றும் சொல்லலாம்,
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர்கள் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்து விவாகரத்து வரை கொண்டு சென்றது. இவர்களின் விவாகரத்திற்கான காரணம் இதுவரை அவர்களின் நேரடியாக தெரிவிக்கவில்லை என்றாலும், பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இதற்க்கு நாக சைதன்யா வாய் திறக்கவில்லை என்றாலும் சமந்தா பதிலடி கொடுத்தார்.
பொய் சொல்லி சென்னைக்கு ஓடி வந்த மனோ பாலா! கமலால் மாறிய வாழ்க்கை.. நடிகரானது எப்படி? சுவாரஸ்ய தகவல்!
Naga Chaitanya
தற்போது நாக சைதன்யா, முதல் முறையாக தமிழில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' என்கிற படத்தில் நடித்துள்ளார். மே 12-ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இப்படி பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டி ஒன்றில்.. விவாகரத்து பெற்றாலும், நட்பாக தொடரலாம் என்று கூறிய கருத்து குறித்து நாக சைதன்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்காக பிரிவோம் என்று முடிவு செய்துவிட்ட பின்னர், நட்பு எதற்கு? அப்படிப்பட்ட நட்பே தேவையில்லை என்பது போல் மிகவும் காட்டமாக... சமந்தாவை அசிங்கப்படுத்துவது போல் பதில் அளித்துள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனோ பாலாவுக்கு என்ன பிரச்சனை? மரணத்திற்கான காரணம் தெரியுமா... வெளியான ஷாக்கிங் தகவல்!
நாக சைதன்யா நடித்துள்ள 'கஸ்டடி' படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், அரவிந்த்சாமி, சம்பத்ராஜ், கிஷோர், பிரியாமணி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.