MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Music: ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!

Music: ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!

பாடகி ஆஷா போஸ்லே, தமிழ் சினிமாவில் குறைந்த பாடல்களைப் பாடியிருந்தாலும், அவை காலத்தால் அழியாத கிளாசிக் பாடல்களாக நிலைத்துவிட்டன. பலவிதமான உணர்ச்சிகளைத் தனது குரலில் வெளிப்படுத்தி, தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 13 2026, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
தமிழ் ரசிகர்களின் மானசீக குரல்.!
Image Credit : instagram

தமிழ் ரசிகர்களின் மானசீக குரல்.!

இந்திய இசை உலகின் எவர்கிரீன் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர் Asha Bhosle. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அவர், தமிழ் சினிமாவிலும் தனது தனித்துவமான குரலால் அழியாத முத்திரை பதித்துள்ளார். குறைந்த எண்ணிக்கையிலேயே பாடியிருந்தாலும், அவர் பாடிய தமிழ் பாடல்கள் அனைத்தும் காலத்தைக் கடந்த மெலடிகளாக இன்று வரை ரசிகர்களின் இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

211
கிராமிய நெஞ்சை வருடிய குரல்.!
Image Credit : instagram

கிராமிய நெஞ்சை வருடிய குரல்.!

1987ஆம் ஆண்டு வெளியான " எங்க ஊரு பாட்டுக்காரன் "படத்தில் இடம்பெற்ற ‘செண்பகமே செண்பகமே’ பாடல், ஆஷா போஸ்லேவின் தமிழ் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். கிராமிய இசை, இனிய வரிகள், மென்மையான குரல்—இந்த மூன்றின் கலவையாக இந்த பாடல் உருவாகி, கிராமத்திலிருந்து நகரம் வரை அனைவரையும் கவர்ந்தது. அந்த காலத்து காதல் உணர்வை நேரடியாக நெஞ்சில் பதித்த பாடல் இதுதான்.

Related Articles

Related image1
Music Legend Asha Bhosle: கண்கலங்கிய இசைப்புயல்.!ஆஷா போஸ்லேவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்.!
Related image2
Asha Bhosle : ஆஷா போஸ்லே - லதா மங்கேஷ்கர் மரணத்தில் 4 விசித்திர ஒற்றுமைகள்.! இறப்பிலும் கூட ஒற்றுமையை கடைபிடித்த அக்கா தங்கை.!
311
காதலின் மென்மையான வெளிப்பாடு
Image Credit : instagram

காதலின் மென்மையான வெளிப்பாடு

மணிர்தனம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தில் வரும் ‘வெண்ணிலா வெண்ணிலா’ பாடல், காதல் உணர்வின் உச்சத்தை தொட்ட மெலடி. மோகன்லால் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்த இந்த பாடல், இசை, காட்சி, குரல்—மூன்றின் அற்புத சங்கமமாக திகழ்கிறது. ஆஷா போஸ்லேவின் குரல் அந்த காதல் தருணங்களை இன்னும் அழகாக மாற்றுகிறது.

411
இரவு நேர மெலடிகளின் ராணி
Image Credit : instagram

இரவு நேர மெலடிகளின் ராணி

கமல் நடித்த ஹேராம் படத்தின் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடல், அமைதியான இரவு நேரங்களில் கேட்க ஏற்ற ஒரு மாயமான மெலடி. இந்த பாடலில் ஆஷா போஸ்லேவின் குரல், காதல், வேதனை, நினைவுகள்—அனைத்தையும் ஒரே நேரத்தில் உணர்த்துகிறது. காதல் கதையின் நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த பாடல், இசை ரசிகர்களுக்கு ஒரு உணர்ச்சி பயணமாகும்.

511
இளைய தலைமுறையின் பேவரிட்
Image Credit : instagram

இளைய தலைமுறையின் பேவரிட்

மாதவன், ஹாலினி நடத்து மனிரத்தனம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செப்டம்பர் மாதம்’ பாடல், இன்றும் பார்ட்டி மூடில் அடிக்கடி ஒலிக்கும் எவர்கிரீன் ஹிட். இளம் தலைமுறையினரையும் கவர்ந்த இந்த பாடல், ஆஷா போஸ்லே காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டதற்கான சிறந்த உதாரணம். இந்த பாடலை கேட்டவுடன் தானாகவே கால்கள் ஆடும்!

611
மீண்டும் டிரெண்டான ஹிட்ஸ்
Image Credit : instagram

மீண்டும் டிரெண்டான ஹிட்ஸ்

விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்தான் நேருக்கு நேர். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எங்கெங்கே’ பாடல், சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் மீண்டும் டிரெண்ட் ஆனது. அதேபோல் சியான் விக்ரம் நடித்த படத்தில் வரும் ‘ஓ பட்டர்பிளை’ பாடலும், ரசிகர்களின் நினைவில் என்றும் வாழும் ஹிட் ஆகும்.

711
மென்மையான காதல் மழை.!
Image Credit : facebook

மென்மையான காதல் மழை.!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ பாடல், ஒரு மென்மையான காதல் மழை போல. இந்த பாடலில் ஆஷா போஸ்லேவின் குரல் காதல் உணர்வை மெதுவாக பரப்புகிறது. மெலடி ரசிகர்களுக்கு இது ஒரு இனிய அனுபவம்.

811
ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம்.!
Image Credit : instagram

ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம்.!

ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் அதிகமாக பாடவில்லை என்றாலும், அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் ஒரு “கிளாசிக்” ஆக மாறியுள்ளது. காதல், மகிழ்ச்சி, வேதனை, கொண்டாட்டம்—எந்த உணர்ச்சியையும் தனது குரலில் உயிர்ப்பித்தவர். இன்று அவர் நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது குரல் இன்னும் நம்முடன் பேசுகிறது… ஒரு பாடல் ஒலிக்கும்போது, அது வெறும் இசை அல்ல—அது ஒரு நினைவு, ஒரு உணர்ச்சி, ஒரு காலப்பயணம்.

911
ரசிகர்களை கட்டிப்போட்ட குரல்.!
Image Credit : instagram

ரசிகர்களை கட்டிப்போட்ட குரல்.!

Asha Bhosle தனது இசை பயணத்தில் பல்வேறு வகையான பாடல்களை எளிதாக கையாள்ந்த திறமையான கலைஞர். தமிழ் பாடல்களில் கூட, அவர் ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் மட்டும் இல்லாமல், கிராமிய இசை முதல் மாடர்ன் மெலடி வரை பல விதமான பாடல்களில் தனது குரலை மாற்றி அமைத்தார். இதுவே அவரை மற்ற பாடகிகளிடமிருந்து வேறுபடுத்தியது. 

1011
மென்மையான வசீகர பாடகி
Image Credit : X.com

மென்மையான வசீகர பாடகி

தமிழில் அதிகமாக பாடாதபோதிலும், Asha Bhosle பாடிய ஒவ்வொரு பாடலும் தனித்துவமான நினைவாக மாறியது. குறிப்பாக Ilaiyaraaja மற்றும் A. R. Rahman போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்தபோது, அவரது குரல் புதிய பரிமாணத்தை எட்டியது. 

1111
இளைஞர்களுக்கு வழிகாட்டிய
Image Credit : X

இளைஞர்களுக்கு வழிகாட்டிய

பல தலைமுறைகளையும் இணைக்கும் பாலமாக இருந்தது Asha Bhosle குரல். பழைய ரசிகர்களுக்கு நினைவாகவும், புதிய தலைமுறைக்கு புதுமையாகவும் அவர் பாடல்கள் தொடர்ந்து ரசிக்கப்படுகின்றன. இதனால், ஆஷா போஸ்லே தமிழ் இசையிலும் ஒரு அழியாத குரலாகவே நிலைத்திருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Asha Bhosle : ஆஷா போஸ்லே - லதா மங்கேஷ்கர் மரணத்தில் 4 விசித்திர ஒற்றுமைகள்.! இறப்பிலும் கூட ஒற்றுமையை கடைபிடித்த அக்கா தங்கை.!
Recommended image2
ஏ.ஆர்.ரகுமானுக்கு பாட்டுபாட வந்த ஆஷா போஷ்லே பதறியடித்து ஓடிய சம்பவம் பற்றி தெரியுமா?
Recommended image3
Music Legend Asha Bhosle: கண்கலங்கிய இசைப்புயல்.!ஆஷா போஸ்லேவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்.!
Related Stories
Recommended image1
Music Legend Asha Bhosle: கண்கலங்கிய இசைப்புயல்.!ஆஷா போஸ்லேவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்.!
Recommended image2
Asha Bhosle : ஆஷா போஸ்லே - லதா மங்கேஷ்கர் மரணத்தில் 4 விசித்திர ஒற்றுமைகள்.! இறப்பிலும் கூட ஒற்றுமையை கடைபிடித்த அக்கா தங்கை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved