- Home
- Cinema
- 'மூன்று முடிச்சு' சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே... இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? ஆச்சர்ய தகவல்!
'மூன்று முடிச்சு' சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே... இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? ஆச்சர்ய தகவல்!
Moondru Mudichu Serial Actress Swathi Konde Films: மூன்று முடிச்சு சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்வாதி கொண்டே, சுமார் 5-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஸ்வாதி கொண்டே:
விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு பரிச்சியமான முகமாக மாறியவர் ஸ்வாதி கொண்டே. இந்த சீரியல் இல்லத்தரசிகளே தாண்டி, இளம் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தது. இந்த சீரியல் முடிவடைந்த பின்னர், தற்போது சன் டிவி-யில் TRP-யில் கெத்து காட்டி வரும் 'மூன்று முடிச்சு' தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மூன்று முடிச்சு தொடர்:
ஹீரோ தன்னுடைய அம்மாவை பழி வாங்குவதற்காக, வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணான நந்தினி கழுத்தில் தாலி கட்டுகிறார். தன்னுடைய அப்பா கேட்டுக்கொண்டதற்காக ஹீரோவின் வீட்டில் வாழ சம்பாதிக்கும் நந்தினியை ஹீரோவை தவிர அனைவருமே ஒரு வேலை காரியாக மட்டுமே பார்க்கிறார்கள்.
எதிர்த்து போராட துணிந்த நந்தினி:
மேலும் இப்போது சூர்யாவுக்கு அவருடைய குடும்பத்தின் சூழ்ச்சியால் காலில் காயம் ஏற்பட்டு எழுந்து நிற்க கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். நந்தினி சூர்யாவை பார்க்க கூடாது என, சூர்யாவின் அம்மா, அக்கா, தங்கை, மாமா ஆகியோர் நினைக்க... சூர்யாவை பார்க்காமல் எங்கும் செல்லமாட்டேன் என நந்தினி வீட்டில் முன்னாடியே அமர்ந்துள்ளார். மேலும் இதுவரை, பயந்து நடுங்கி வந்த நந்தினி இனி சூர்யாவுக்காக தனக்கு எதிராக நிற்பவர்களையே எதிர்த்து நிற்க துணிந்துள்ளார்.
சீரியலுக்கு முன்பே திரைப்படம்:
பரபரப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில், கதாநாயகியாக நடித்து வரும் ஸ்வாதி கொண்டே தன்னுடைய பர்பாம்மென்ஸால் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார். அதே சமயம் இவர் சின்னத்திரையில் அறிமுகமாகும் முன்பே திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஸ்வாதி கொண்டே நடித்துள்ள படங்கள்:
ஆம் ஸ்வாதி கொண்டே பெங்களூரை சேர்ந்தவர் என்பதால், இவர் முதலில் அறிமுகமானது கன்னட மொழி படம் மூலமாக தான். 2017ம் ஆண்டு பியூட்டிஃபுல் மனசுகளு என்கிற படத்தில் தான் அறிமுகமானார், இதை தொடர்ந்து கமரோட்டு செக்கபோஸ்ட , வெண்ணிலா, காட்டு காதே போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காத நிலையில், சீரியல் நடிகையாக மாறினார். தமிழில் இவர் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'மெய்யழகன்' படத்திலும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.