MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வயநாடு நிலச்சரிவு! நிவாரண நிதியை மகனோடு சேர்ந்து கிள்ளி கொடுத்த மம்மூட்டி.. அள்ளிக்கொடுத்த மோகன்லால்!

வயநாடு நிலச்சரிவு! நிவாரண நிதியை மகனோடு சேர்ந்து கிள்ளி கொடுத்த மம்மூட்டி.. அள்ளிக்கொடுத்த மோகன்லால்!

வயநாடு நிலச்சரிவால் ஏராளமான கேரள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில்,  பலர் தற்போது முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவி வரும் நிலையில், நடிகர் மோகன்லால் மூன்று கோடி நிதி அளித்துள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 03 2024, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Wayanad Landslide

Wayanad Landslide

ஒரு மாதமாக கேரளாவில் பெய்து வரும் பருவ மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒரே நாளில் ஏராளமான மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பறித்துவிட்டது. ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இப்போது மீண்டும் இயற்கையால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

25
wayanad landslide

wayanad landslide

நிலச்சரிவில் சிக்கிய மக்களை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டு அனுமதித்துள்ளது ஒருபுறம் இருக்க, இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்.  இன்னும் புதை மண்ணில் சிக்கி சிலர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

35
Wayanad Relief Fund:

Wayanad Relief Fund:

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக, கேரள முதல்வர் பினராயி விஜயனின் நிவாரண நிதிக்கு, வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா 50 லட்சமும், நயன்தாரா 20 லட்சமும், நஸ்ரியா - பகத் பாஸில் 25 லட்சமும், விக்ரம் 20 லட்சமும், மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் 35 லட்சமும் நிதி கொடுத்துள்ளனர்.
 

45
lt colonel mohanlal visit wayanad landslide areas on army uniform

lt colonel mohanlal visit wayanad landslide areas on army uniform

இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரபலங்கள் கேரள மக்களை இந்த துயரத்தில் இருந்து மீட்க... நிவார பொருட்களை அனுப்பி வருகிறார்கள். தற்போது பிரபல நடிகர் மோகன் லால், ஆர்மி உடையணிந்து வயநாடு பகுதியை பார்வையிட்டது மட்டும் இன்றி மூன்று கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் இது மிகவும் துயரமான சம்பவம் என தன்னுடைய வேதையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

55
Mohanlal Donate 3cr Relief Fund:

Mohanlal Donate 3cr Relief Fund:

ஏற்கனவே சூர்யா 50 லட்சம் கொடுக்கும் போது, மலையாள திரை உலகை சேர்ந்த சூப்பர் ஸ்டார் மம்முட்டி 35 லட்சமே அதுவும் மகனுடன் சேர்ந்து கொடுத்துள்ளார் என்று சிலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வந்த நிலையில், தற்போது மம்மூட்டியை விட பல மடங்கு தொகையை மோகன்தால் அள்ளிக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மோகன்லால்

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Recommended image2
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved