25 வயது நடிகையுடன் டேட்டிங்..! மீண்டும் பிளே பாய் ஆக வலம் வருகிறாரா சமந்தாவின் மாஜி கணவர்?
நடிகை சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா, 25 வயது நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக டோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்துக்கு பின்னர் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமந்தா ஒருபுறம் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பிசியாக நடிக்க, நாகசைதன்யாவும் கடந்தாண்டு வெளியான லால் சிங் சத்தா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அப்படத்தில் அமீர்கானின் நண்பனாக நடித்திருந்தார் நாக சைதன்யா. அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதையும் படியுங்கள்... அட்ஜஸ்மெண்ட் செய்தால் பட வாய்ப்பு... திரையுலகில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனம்திறந்த நயன்தாரா
சோபியா உடன் நாக சைதன்யா
இப்படி படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், நாக சைதன்யா பற்றிய கிசுகிசுக்களும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளனர். அவர் ஏற்கனவே பொன்னியின் செல்வன் பட நடிகை சோபியாவை காதலித்து வருவதாக தகவல் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றிய புகைப்படங்களும் வெளியாகின.
நாக சைதன்யா, திவ்யன்ஷா கவுஷிக்
இந்நிலையில், 25 வயது நடிகையான திவ்யன்ஷா கவுஷிக் உடன் நடிகர் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக டோலிவுட்டில் தகவல் பரவி வந்தது. இதுகுறித்து நடிகை திவ்யன்ஷாவே சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார். அதன்படி நாக சைதன்யா மீது தனக்கு கிரஷ் இருப்பதாகவும், ஆனால் தாங்கள் இருவரும் டேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகை திவ்யன்ஷா கவுஷிக்கும், நாக சைதன்யாவும் மஜிலி என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வாரிசு வந்தாச்சு... அப்பா ஆன குஷியில் இயக்குனர் அட்லீ பதிவிட்ட கியூட் போட்டோவுக்கு குவியும் லைக்குகள்