காற்று போக கூட இடமில்லாமல் இறுக்கி அணைத்திருக்கும் மீரா மிதுன்... இவர் தான் வருங்கால கணவரா?
மீரா மிதுன் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் மீரா மிதுன். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகழும் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என நினைத்த மீரா மிதுனுக்கு கிடைத்தது என்னவே பொல்லாப்பு தான். தேவையில்லாமல் சேரன் மீது வீண் பழியை தூக்கிப்போட்டு, தமிழக ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
வெளியே வந்து சும்மா இல்லாமல் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களையும், ஏன் அரை நிர்வாண போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு வாய்ப்பு தேடினார். எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை.
மீரா மிதுனுக்கு சர்ச்சை தான் கைவந்த கலை ஆகிற்றே. அதனால் அதை கையில் எடுத்தார். ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களை பற்றி வாய்க்கு வந்த படி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார்.
விளைவு இப்போது மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழகுப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் மீரா மிதுன் விரைவில் கைதாவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மீரா தான் வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு couple challenge accepted என்று தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்களோ பார்க்க ரொம்ப சின்னப் பையனா தெரியுறார்/ அவர் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் என வழக்கம் போல் கலாய்த்து வருகின்றனர்.