உறுதியானது “தளபதி” பொங்கல்... ஓடிடியா? தியேட்டரா? உண்மையை விளக்கிய மாஸ்டர் படக்குழு...!
இதனால் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகுமா? என்ற சந்தேகம் வலுத்து வந்தது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்று வரை நிறைவேறாமல் உள்ளது.
இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது.
தீபாவளி பரிசாக வெளியான மாஸ்டர் பட டீசர் இதுவரை பல்வேறு சாதனைகளை படைத்து 40 மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்திருந்தாலும், குறைந்தது 90 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி கொடுத்தால் தான் பெரிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய வாய்ப்பாக இருக்கும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
இதனால் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகுமா? என்ற சந்தேகம் வலுத்து வந்தது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் மாஸ்டர் படத்தை கோடிகளைக் கொட்டிக்கொடுத்து வாங்கியுள்ளதாகவும், படத்தை ஓடிடியில் வெளியிடுவதா? தியேட்டரில் வெளியிடுவதா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமார் தெரிவித்திருந்தார்.
ஆனால் உண்மையில் மாஸ்டர் படத்தையும் அமேசான் பிரைம் நிறுவனம் தான் வாங்கியுள்ளதாம். பல மாதங்களுக்கு முன்பே அதற்கான விற்பனை நடைபெற்றுள்ளது. இருப்பினும் பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்றும், அதன் பின்னரே ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்றும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.