மீண்டும் இணைந்த கர்ணன் கூட்டணி.. கேப்டன் மில்லர் லுக்கில் மாஸ் அப்டேட் கொடுத்த தனுஷ் !!
நடிகர் தனுஷ் தயாரிக்க உள்ள புதிய படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். மிக பிரமாண்டமாக இப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார்.
மேலும் இதில் நட்ராஜ், லால், கௌரி கிஷன், லட்சுமி பிரியா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். 1990களில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருந்தார்.
அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மேல் மட்டத்தினர் கொடுமைப்படுத்துவது போலவும் சித்தரிக்கப்பட்டு படத்தை எடுத்திருந்தார் மாரி செல்வராஜ். இந்நிலையில் மீண்டும் நடிகர் தனுஷூம், இயக்குனர் மாரிசெல்வராஜூம் இணையும் புதிய படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
இப்படத்தை தனுஷின் வொண்டார்பார் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களையும் தயாரிக்காமல் இருந்துவந்த தனுஷ் தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ள நிலையில், தற்போது குழந்தைகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலையில் இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்து.... இளசுகளை இம்சிக்கும் ரம்யா பாண்டியன் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்