எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா... 1 பாட்டுக்கு ஒரு கோடி கேட்ட வெளிநாட்டு கம்பெனியை கதறவிட்ட மணிரத்னம்
இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் காம்போவில் வெளிவந்த அலைபாயுதே படத்தின்போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Maniratnam, AR Rahman
தமிழ் சினிமாவில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ளவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் வெளியாகி காலம் கடந்து கொண்டாடப்படும் படைப்புகளில் அலைபாயுதே படமும் ஒன்று. கடந்த 2000-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் தான் நடிகர் மாதவன் தமிழ் திரையுலகில் நாயகனாக எண்ட்ரி கொடுத்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார். அவர் நடித்த கடைசி திரைப்படம் இதுவாகும்.
Maniratnam, AR Rahman movies
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். அப்பாடத்தின் பாடல்கள் எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறதோ, அதே அளவு அப்படத்தின் பின்னணி இசையும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மாதவனின் எண்ட்ரி சீனுக்கு ஏ.ஆர்.ரகுமான் போட்ட என்றென்றும் புன்னகை என்கிற தீம் பாடலை ரசிக்காத ஆளே இருக்க முடியாது.
Maniratnam, AR Rahman flashback story
அந்த தீம் பாடலுக்கு பின்னணியில் தான் ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, மாதவனின் எண்ட்ரிக்காக முதலில் பேக்ஸ்டிரீட் பாய்ஸ் குழுவின் பாடலை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தாராம் மணிரத்னம். இதற்கான உரிமை கோரி வெளிநாட்டு மியூசிக் கம்பெனி ஒன்றை அணுகியபோது, அவர்கள் அந்த ஒரு பாடலை பயன்படுத்த ஒரு கோடி தர வேண்டும் என கேட்டார்களாம். இதனால் ஷாக் ஆன மணிரத்னம், வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
இதையும் படியுங்கள்... புறம்போக்கு நிலங்களை வளைத்து போட்டு கொடைக்கானலில் சொகுசு வீடு கட்டும் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா? மக்கள் புகார்
Maniratnam, AR Rahman Alaipayuthey music
பின்னர் ஏ.ஆர்.ரகுமானை வைத்து என்றென்றும் புன்னகை என்கிற மாஸ் பாடலை உருவாக்கி அதனை படத்தில் வைத்து வெற்றியும் கண்டார் மணிரத்னம். பின்னர் தான் இயக்கிய உயிரே படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தக்க தைய தையா பாடலை இன்சைடு மேன் என்கிற ஹாலிவுட் படத்தில் பயன்படுத்த அதே மியூசிக் கம்பெனி அனுமதி கேட்டதாம்.
இதற்கு தைய தையா பாடலை இலவசமாக கொடுக்க அதன் இசை உரிமையை வைத்திருந்த நிறுவனம் முடிவெடுத்த நிலையில், இந்த தகவல் அறிந்த மணிரத்னம், ஒரு கோடி கொடுத்தால் தான் அதை தர முடியும் என டீல் பேசினாராம். இதற்கு அந்த வெளிநாட்டு மியூசிக் நிறுவனமும் ஒப்புக்கொண்டு ஒரு கோடி கொடுத்து அந்த பாடலை வாங்கிச் சென்றதாம். தனக்கு விபூதி அடிக்க பார்த்த நிறுவனத்திடம் டீல் பேசி ஒரு கோடி சம்பாதித்து கொடுத்த மணிரத்னம் தான், நிஜமாவே ஒரு ஜீனியஸ் தான் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தொடரும் சூப்பர் ஸ்டாரின் ஆன்மீக பயணம்; அயோத்தியில் தரிசனம் - ரஜினிகாந்த் சொன்ன அந்த மூன்று வார்த்தைகள்!