Malavika mohanan :அட்ராசக்க.. மாஸ்டர் நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு! பாகுபலி நாயகனுடன் டூயட்பாட போறாராம்
Malavika mohanan : விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை மாளவிகா மோகனன், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள நடிகைகளுக்கு தமிழ் திரையுலகில் எப்பொழுதுமே மவுசு உண்டு. அந்த வகையில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல்வேறு முன்னணி நடிகைகள் சாதித்துள்ள நிலையில், தற்போது புதுவரவாக இணைந்திருப்பவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினியின் பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கினார். இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. இப்படம் மூலம் அவர் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் தற்போது மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார் மாளவிகா. கார்த்திக் நரேன் இயக்கி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற மார்ச் 11-ந் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்திற்கு ராஜா டீலக்ஸ் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் தான் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாராம். இந்த கூட்டணி உறுதியானால் நடிகை மாளவிகா மோகன் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாக இது அமையும். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Shine Tom Chacko : பீஸ்ட் நடிகர் அடாவடி... குப்பை போட்டதை தட்டிக் கேட்ட நபரை பொளந்துகட்டியதால் பரபரப்பு