டவல் மட்டும் கட்டி கொண்டு மாளவிகா மோகன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்..! அடித்து நொறுக்கும் லைக்ஸ்..!
தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள மாளவிகா மோகன், அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நெட்டிசன்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார்.
தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.
இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை.
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர்.
குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார்.
பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மாளவிகா மோகனன். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் பட இயக்குநர் ரவி உத்யவார் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் நடிக்க 100 நாட்கள் மாளவிகா கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், சம்பளமாக 5 கோடி பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இரண்டே படத்தில் நயன்தாராவையே பின்னுக்கு தள்ளிவிட்டார் மாளவிகா, என கோலிவுட் திரையுலகம் கிசுகிசுத்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க தற்போது டவல் மட்டும் காட்டியபடி மேக் அப் போடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை இந்த புகைப்படம் குவித்துள்ளது.