Malavika : கடற்கரையில் மனதை கரைக்கும் போஸ்களை கொடுத்த நடிகை மாளவிகா..
தற்போது கடற்கரையில் பொழுதை கழிக்க சென்றுள்ள மாளவிகா அங்கிருந்து பகிர்ந்துள்ள போட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.
Malavika
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முன்னிட்டு மொழிகளில் மிக பிரபலமாக நடிகை இருந்து வந்தவர் மாளவிகா. கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி இருந்தார் மாளவிகா.
Malavika
தனது 19 வது வயதில் நாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்னும் படத்திலும் அஜித்துக்கு ஜோடியாகவே இவர் நடித்தார். மூன்றாவது படமாக ரோஜாவனம் என்னும் படத்தில் சிந்துவாக தோன்றியிருந்தார். இந்த படத்தில் கார்த்திக், லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
Malavika
பின்னர் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் கூட தொடங்கியது. தொடர்ந்து வெற்றி கொடி கட்டு படத்தில் அமுதாவாக வந்து கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு என மனதை கவர்ந்திருந்தார் மாளவிகா.
Malavika
அதிக கவனம் செலுத்தி வந்த இவர் பேரழகு, வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் காமியோ ரோலில் நடந்தார். 2005 ஆம் ஆண்டு ரஜினி காந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்து மீண்டும் பிரபலமானார் மாளவிகா.
Malavika
இதை அடுத்து இவருக்கு பாலிவுட் பக்கமும் வாய்ப்புகள் கிடைத்தது. அங்கு அதிக படங்களில் நடித்த மாளவிகா. தொடர்ந்து காமியோ ரோல்களிலேயே நடித்து வந்தார். தமிழில் பல படங்களில் தோன்றியுள்ள இவருக்கு சமீபத்தில் தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.
Malavika
இறுதியாக கோல்மால் என்னும் படத்தில் நடித்திருந்தார் மாளவிகா. 44 வயதாகும் இவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் பொழுதை கழிக்க சென்றுள்ள மாளவிகா அங்கிருந்து பகிர்ந்துள்ள போட்டோக்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.