- Home
- Cinema
- அடுத்தடுத்து மோதிய கார்கள்... பயங்கர விபத்தில் உயிர்தப்பிய மணிரத்னம் பட நடிகை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அடுத்தடுத்து மோதிய கார்கள்... பயங்கர விபத்தில் உயிர்தப்பிய மணிரத்னம் பட நடிகை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Malaika Arora : தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்த நடிகை மலைகா அரோராவை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் இடம்பெற்ற தையா தையா பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பாடலில் ஷாருக்கான் உடன் இணைந்து நடிகை மலைக்கா அரோராவும் கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். அப்பாடல் மூலம் பாப்புலர் ஆன அவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை மலைகா அரோரா நேற்று இரவு பூனேவில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், தனது சொகுசு காரில் மும்பைக்கு திரும்பி உள்ளார். செல்லும் வழியில் கோபோலி எக்ஸ்பிரஸ் சாலையில் முன்னே சென்ற காரின் மீது மலைகா அரோரா சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த சமயத்தில் பின்னே வந்த காரும் மலைகா அரோரா சென்ற காரின் மீது மோதியதால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டனர். தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்த நடிகை மலைகா அரோராவை மீட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தலையில் தையல் போடப்பட்டு உள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் அவரின் நண்பர் தெரிவித்துள்ளார். இன்று அல்லது நாளை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் போனிகபூரின் மகன் அர்ஜுன் கபூரின் காதலி தான் மலைகா அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Beast : ஆக்ஷன் காட்சிக்காக 13 ஆண்டுகளுக்கு பின் விஜய் எடுத்த ரிஸ்க்... பீஸ்ட் டிரைலரில் இதை கவனிச்சீங்களா..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.