ஜன நாயகன் ரிலீஸ் தேதியை மாற்றச் சொன்னதா கோர்ட்? பரபரப்பான வழக்கின் பின்னணி இதோ!
Jana Nayagan Movie Court Case Update : தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறிய நீதிபதி ஜன நாயகன் படத்தை ஏன் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய கூடாதா? என்று கேள்வி எழுப்பியது சினிமா வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jana Nayagan Movie Court Case Update
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றே கூறலாம்.
ரீமேக்கால் வந்த பிரச்சனை:
தெலுங்கில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, அர்ஜுன் ராம்பால் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என ஏகப்பட்ட உறுதியான தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்களும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜன நாயகன் படத்தை தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்த நிலையில், படத்தின் முதல் விமர்சனம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. ஜன நாயகன் ரீமேக் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி படம் எப்படி இருக்கும் என்று மனதில் கேள்வி எழ தொடங்கியது ஆனால் ஏன்டில் ட்விஸ்ட் இருக்கும் என்றும் கூறியிருந்த நிலையில் அதை எதிர்பார்த்து இருக்கின்றன ரசிகர்கள்.
சான்றிதழ் வழங்கவில்லை:
இப்போதுவரை தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம். டிசம்பர் மாதமே படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள்; சில மாற்றங்களை சொன்னதாகவும்; அதை படக்குழு செய்தும் சர்ட்டிஃபிக்கேட் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் ஜன நாயகனுக்கு தொடர்ந்து சிக்கல் நிலவிவருகிறது.
தயாரிப்பு நிறுவனம் செய்த செயல்:
படம் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில் இன்றுவரை சான்றிதழ் வாங்க படாததால் பொறுமை இன்றி கே வி என் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. டிசம்பர் மாதமே சென்சார் நிறுவனம் படத்தை முழுமையாக பார்த்தும் இன்று வரை சான்றிதழ் வழங்கவில்லை. இது யார் செய்த சதி செயல் என்றும் தெரியாத நிலையில் வழக்கு பதிவு செய்து கேவி நிறுவனம்.
தீர்ப்பு ஒத்திவைப்பு:
ஜன நாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படுமா என்ற கேள்வி இதுவரையில் கேள்விக்குறியாக உள்ளது தீர்ப்பு வழங்க ஒத்திவைத்த நிலையில் அவசர வழக்குகாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கவில்லை என்றால் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விக்குறியிலேயே உள்ளது.
நீதிபதி கேட்டுக்கொண்டது:
நீதிபதி நாளை தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகுமா என்று தெரியாத நிலையில் ஜனவரி 10ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யலாமே என்றும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் தை மாதம் ரிலீஸ் செய்தால் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றும் கே வி என் நிறுவனத்திடம் நீதிபதி பிடி ஆஷா கேட்டுள்ளார். உண்மையில் ஒரு நீதிபதி இப்படியெல்லாம் கேள்வி எழுப்பலாமா? ஏன் சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை, படத்தில் அப்படி என்ன பிரச்சனை இருக்கிறது என்று கேட்டிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. அதைவிட்டு விட்டு ஏன் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யலாமே என்று கேள்வி எழுப்புவது நியாயமே இல்லை என்று ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரையில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஒருவேளை நீதிபதி கேட்டது போன்று படம் 10ஆம் தேதி ரிலிஸ் செய்யப்பட்டால் 9ஆம் தேதி படம் பார்க்க டிக்கெட் புக் செய்தவர்களின் நிலைமை? டிக்கெட்டுக்கான கட்டணம் திரும்ப கொடுக்கப்படுவதாக இருந்தாலும் சரி அவர்களின் மன நில எப்படி இருக்கும் தெரியுமா? இதையெல்லாம் நீதிபதி யோசிக்கமாட்டாரா?
ரசிகர்களின் ஏமாற்றம்:
கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஒன்பதாம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என்பதால் முன்பதிவு செய்து விட்டனர் தற்போது பத்தாம் தேதிக்கு ரிலீஸ் செய்தால் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்று ரசிகர் உருவத்தில் கூறப்படுகிறது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்னும் முன்பதிவு தொடங்கப்படாத இருந்த நிலையில் தமிழ்நாடு தப்பித்து விட்டதே என்றே கூறலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.