- Home
- Cinema
- மாமன்னனை நம்பி மாரீசனில் ஏமாந்த மூவி டீம்: ஃபகத் பாசில் அண்ட் வடிவேலு காம்போவிற்கு வெற்றியா?
மாமன்னனை நம்பி மாரீசனில் ஏமாந்த மூவி டீம்: ஃபகத் பாசில் அண்ட் வடிவேலு காம்போவிற்கு வெற்றியா?
Maareesan Box Office Collection Day 2 Report : மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான மாரீசன் படத்தின் 2ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி பார்க்கலாம்.

மாரீசன் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
Maareesan Box Office Collection Day 2 Report :இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஃபகத் பாசில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மீண்டும் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் மாரீசன். மாமன்னன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் காம்பினேஷனில் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வெளியான படம் தான் மாரீசன்.
மாரீசன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவானதற்கு காரணமே வடிவேலு - பகத் பாசில் கூட்டணி தான். மாரீசன் திரைப்படத்தில் வடிவேலு வேலாயுதம் என்கிற கேரக்டரிலும், பகத் பாசில் தயா என்கிற ரோலிலும் நடித்துள்ளனர். கதைப்படி வடிவேலு மறதி நோய் உள்ளவர்.
மாரீசன் 2ஆவது நாள் வசூல்
ஒருநாள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும்போது பின்-ஐ மறந்துவிடுகிறார். திருடனான பகத் பாசில் அப்போது அங்கு வந்து வடிவேலுவிடம் அதிக பணம் இருப்பதை அறிந்ததும், அதை எப்படியாவது அபேஸ் செய்ய முடிவெடுத்து அவரை பைக்கில் அழைத்து செல்கிறார். இந்த பயணத்தின் போது என்ன ஆனது? வடிவேலுவிடம் இருந்து பகத் பாசில் பணத்தை திருடினாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.
மாரீசன் முதல் நாள் வசூல்
படத்தின் கதை சூப்பராக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் இயக்குநர் கோட்டைவிட்டுள்ளார். இதனால் மாரீசன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு போதுமான புரமோஷன் செய்யாததும் அதன் சுமார் வரவேற்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஃபகத் பாசில் - வடிவேலு காம்போ
இதற்கு போட்டியாக வெளிவந்த தலைவன் தலைவி படக்குழு செய்த புரமோஷனில் 10 சதவீதம் கூட மாரீசன் படத்திற்கு செய்யப்படவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் செம அடி வாங்கி உள்ளது மாரீசன் திரைப்படம். அப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் இப்போது 2ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரமும் வெளியாகியுள்ளது.
மாரீசன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
மாரீசன் திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் வெறும் ரூ.75 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. பகத் பாசில் - வடிவேலு என இரு திறமைவாய்ந்த நடிகர்கள் நடித்திருந்தும் இப்படம் எடுபடவில்லை. இதற்கு போட்டியாக வெளிவந்த தலைவன் தலைவி திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூலித்திருக்கிறது. அதில் பாதி வசூல் கூட மாரீசன் படத்திற்கு கிடைக்கவில்லை. 2ஆவது நாளில் முதல் நாளை விட கூடுதலாக வசூல் எடுத்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் மாரீசன் 2ஆவது நாளில் ரூ.1.11 கோடி வசூல் எடுத்துள்ளது. மொத்தமாக 2 நாட்களில் மாரீசன் ரூ.1.86 கோடி வசூல் குவித்துள்ளது.