MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? முதல் நாள் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? முதல் நாள் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Top 10 Highest Grossing Tamil Movies on Day 1 : தமிழ் திரையுலகில் ரிலீஸ் ஆன முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Sep 06 2024, 11:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Top 10 Highest Grossing Tamil Movies on Day 1

Top 10 Highest Grossing Tamil Movies on Day 1

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கு விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் ரிலீஸ் ஆனால், அனைவரின் கவனமும் அப்படம் முதல் நாளில் எவ்வளவும் வசூல் செய்திருக்கிறது என்பதில் தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் லியோ. இப்படம் தான் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படமாக உள்ளது. இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.148 கோடி வசூலை வாரிக்குவித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று வரை இந்த ரெக்கார்டை எந்த தமிழ் படமும் முறியடிக்கவில்லை.

2. எந்திரன் 2.0

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த படம் எந்திரன் 2.0. கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக ரூ.800 கோடி வசூலித்திருந்த இப்படம், முதல் நாளில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
GOAT

GOAT

3. பொன்னியின் செல்வன் 1

தமிழ் சினிமாவின் கனவு திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். அதை பல இயக்குனர் எடுக்க முயற்சித்து தோல்வியை தழுவினாலும், இறுதியாக மணிரத்னத்தால் அது சாத்தியமானது. கடந்த 2022-ம் ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகமும் கடந்த ஆண்டு அதன் இரண்டாம் பாகமும் ரிலீஸ் ஆனது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் முதல் நாளில் ரூ.80 கோடி வசூலித்து 3ம் இடத்தில் உள்ளது.

4. கோட்

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போடு வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.73 முதல் ரூ.75 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இந்த பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளது.

35
Jailer Movie

Jailer Movie

5. பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்த திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் வசூல் ரீதியாக நஷ்டம் அடையவில்லை. இப்படம் முதல் நாளில் ரூ. 72 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.

6. ஜெயிலர்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் ஜெயிலர். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. நடிகர் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக ஜெயிலர் அமைந்தது. இப்படம் முதல் நாளில் ரூ.70 கோடி வசூலை வாரிக்குவித்து இந்த பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்... ‘கோட்’டுக்கு பாக்ஸ் ஆபிஸில் வேட்டு; லியோ பட வசூலில் பாதிகூட வரல! விஜய் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?

45
Vikram

Vikram

7. சர்கார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்த படம் சர்க்கார். கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.69 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 7-வது இடத்தை பிடித்திருக்கிறது.

8. விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இப்படம் முதல் நாளில் ரூ.66 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளது.

55
Valimai

Valimai

9. பிகில்

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் பிகில். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.55 கோடி வசூலித்து 9-ம் இடம் பிடித்திருக்கிறது.

10. வலிமை

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ஹீரோவாக நடித்த படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்து இருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.50 கோடி வசூலித்து 10வது இடத்தில் உள்ளது. நடிகர் அஜித்தின் கெரியரில் முதல் நாள் அதிக கலெக்‌ஷனை அள்ளிய படமும் இதுதான்.

இந்த டாப் 10 படியலில் நடிகர் விஜய்யின் படங்கள் மட்டுமே 5 உள்ளன. இதன்மூலம் தளபதி தான் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பது தற்போது வெளியாகி உள்ள கோட் படம் மூலம் மீண்டும் நிரூபனம் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... த்ரிஷா உடன் ரிலேஷன்ஷிப்; சங்கீதா உடன் விவாகரத்தா? சர்ச்சைகளுக்கு சைலண்டாக எண்ட் கார்டு போட்ட விஜய்!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image2
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved