MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக சினிமாவில் அல்ட்ரா லெஜண்டாக களமிறங்குகிறாரா கிரண்குமார்? - அவரே சொன்ன ‘நச்’ பதில்

லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக சினிமாவில் அல்ட்ரா லெஜண்டாக களமிறங்குகிறாரா கிரண்குமார்? - அவரே சொன்ன ‘நச்’ பதில்

சினிமாவில் அறிமுகமாகி உள்ள லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக பிரபல நகைக்கடை ஓனரான கிரண்குமாரும் படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Aug 05 2022, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விளம்பரங்களில் நடிகர், நடிகைகள் நடித்தால் தான் மக்கள் ரசிப்பார்கள் என்கிற டிரெண்ட் தற்போது மாறிவிட்டது. இதனை உடைத்தெறிந்தவர் லெஜண்ட் சரவணன். இவர் தனது கடை விளம்பரங்களில் தானே நடித்து புது டிரெண்டை உருவாக்கினார். இதை மற்ற பெரிய தொழிலதிபர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

25

அவ்வாறு பிரபலமானவர் தான் கிரண்குமார். நகைக்கடை நடத்தி வரும் இவர் தனது கடைக்கான விளம்பரங்களில் தானே நடித்து வருகிறார். சமீபத்தில் லெஜண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

35

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியான இப்படம் ரிலீசானது முதல் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதையெல்லாம் பற்றி கவலைப்படாத லெஜண்ட் சரவணன் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அப்படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்... கடலுக்கடியில் பேனர் வைத்து அதகளம் செய்த ரசிகர்கள் - வைரல் வீடியோ

45

இதனிடையே லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக பிரபல நகைக்கடை ஓனரான கிரண்குமாரும் சினிமாவில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக அல்ட்ரா லெஜண்டாக களமிறங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.

55

இந்நிலையில், அதுகுறித்து கிரண்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, தனக்கு சினிமாவுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை என கூறி உள்ளார். மேலும் தன்னால் டான்ஸ் எல்லாம் ஆட முடியாது என்றும், தற்போது இருக்கும் இடமே தனக்கு போதும் என்றும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கிரண்குமார்.

இதையும் படியுங்கள்... பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை..காவலர்களுக்கு வாழ்த்து சொன்ன கமல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved