18 வயதில் அடியெடுத்து வைக்கும் கீர்த்தி ஷெட்டி..!! இதுவரை அதிகம் பார்த்திடாத பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்..!!
பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், 'உப்பேனா' திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிருதி ஷெட்டி.
பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், 'உப்பேனா' திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிருதி ஷெட்டி.
விஜய் சேதுபதிக்கு மகளாக இந்த படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய 17 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 21) தனது 18 வது பிறந்தநாளைக் கிருதி ஷெட்டி கொண்டாடுகிறார். இந்த தருணத்தில் இவரது அதிகம் பார்க்கப்படாத புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு, பார்க்கப்பட்டும் வருகிறது.
மங்களூரைச் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி, 2003 இல் கிருஷ்ண ஷெட்டி மற்றும் நீதி ஷெட்டி ஆகியோருக்குப் பிறந்தவர்.
குழந்தை பருவத்திலிருந்தே, அவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்தார் அவருடைய அழகு அதற்க்கு வழிவகை செய்தது.
மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து, தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து, தன்னுடைய அழகாலும், புன்னகையால் ரசிகர்களை வசீகரித்தார்.
சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரா 'உப்பேனா' திரைப்படம் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டபோது, பஞ்சா வைஷ்ணவ் தேஜுக்கு ஜோடியாக ‘2 கண்ட்ரிஸ்’ பட நடிகை மனிஷா ராஜ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், சில காரணங்களால், அவர் பாதிலேயே வெளியேறியதால், இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்புகிருதி ஷெட்டிக்கு கிடைத்தது.
தெலுங்கு மற்றும் தமிழில் இவரை கமிட் செய்ய பலர் போட்டி போட்டு வரும் நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தன்னுடைய 18 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.