- Home
- Cinema
- Katrina Kaif - Vicky Kaushal wedding: ரகசிய குறியீடுடன் அனுமதிக்கப்படும் விருந்தினர்கள்..! என்ன காரணம்?
Katrina Kaif - Vicky Kaushal wedding: ரகசிய குறியீடுடன் அனுமதிக்கப்படும் விருந்தினர்கள்..! என்ன காரணம்?
பாலிவுட்டில் தற்போது பரவலாக பேசப்படும் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷல் (Vicky Kaushal ) திருமணம் ராஜஸ்தானில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் நடைபெற உள்ளதாகவும், இவர்கள் திருமணத்தில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயமாக ரகசிய குறியீடு கடைபிடிக்கப்ப பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமணம் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 9 வரை மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இது கலந்து கொள்ள, குறைந்த அளவிலான விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விருந்தினர்களுக்கு ரகசிய குறியீடும் வழக்க பட்டுள்ளதாம்.
இந்த பிரமாண்டமான திருமண விழாவில் தேவையற்ற சில விஷயங்களை தவிர்ப்பதற்காகவே, இப்படி பட்ட ஏற்பாடுகளை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் குடும்பத்தினர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திருமண புகைப்படங்கள், வீடியோக்களை அனுமதி இன்றி உறவினர்கள் கூட எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மொபைல் போன், கேமரா போன்றவை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் டிசம்பர் 7 ஆம் தேதி சங்கீத் நிகழ்ச்சியும், டிசம்பர் 8 ஆம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்று , இறுதியாக, டிசம்பர் 9 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளது.
சில பாலிவுட் பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதால், 40க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் சல்மான் கான், ஷாருக்கான், ஆலியா பட், ரோஹித் ஷெட்டி, ஃபர்ஹான் கான் மற்றும் பலர் அடங்குவர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொழுது போக்கிற்கு, முன்னணி பாடகர்களின் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், அவர்களுக்கும் ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் தங்குவதற்காக, ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் உள்ள ராஜா மான் சிங் என்ற மிக விலையுயர்ந்த கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இதில் தோட்டம் மற்றும் நீச்சல் குளம் உள்ளது. இது தவிர மற்ற 15 சூட் ரூம்கள் உள்ளன இவற்றிற்கு, ஒரு நாளைக்கு மட்டும் 4 லட்சம் வாடகை என கூறப்படுகிறது. மற்ற அறைக் கட்டணங்கள் 1 லட்சம் ஆகும். டிசம்பர் 6 ஆம் தேதியே இங்கு வரும் ஜோடிகள், டிசம்பர் 11 ஆம் தேதி செக் அவுட் செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.