முதல் திருமணம் குறித்து ஒபனா சொல்லி மாட்டிக்கிட்ட கார்த்திக் – கார்த்திகை தீபம் 2!
Karthigai Deepam 2 Karthik Raja Revealed his First Marriage : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் தனது முதல் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசி ரேவதியிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

Karthigai Deepam 2 Karthik Raja Revealed his First Marriage :
கார்த்திகை தீபம் 2 சீரியல் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் ஒளிபரப்பு செய்யும் இந்த சீரியலில் இப்போது துர்காவின் திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தீபாவின் அண்ணி நகையை திருடிச் சென்றுவிட்டதாக சந்திரகலா குற்றம் சாட்டுகிறார். அப்போது வந்த கார்த்திக் அவர்கள் திருடியிருக்க மாட்டார்கள். அவர்கள் என்னுடைய உறவினர் என்று கூறுகிறார். அதோடு கடந்த வாரம் கார்த்திகை தீபம் 2 சீரியலின் எபிசோடு முடிந்தது.
கார்த்திகை தீபம் 2
இதைத் தொடர்ந்து இந்த வாரம் இன்று நடக்கும் எபிசோடில் ரேவதி தன்னுடைய பாட்டியை பார்த்து உங்களுக்கு கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணம் நடந்த விஷயம் தெரியம் அல்லவா. அப்போது ஏன் அதைப் பற்றி சொல்லவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். அந்த நேரத்திலும் கூட சாமுண்டீஸ்வரி தன்னுடைய மாப்பிள்ளையான கார்த்திக்கை காப்பாற்றுகிறார்.
கார்த்திகை தீபம் 2 சீரியல்
அதாவது, நீங்கள் உங்களது முதல் மனைவி இறந்த பிறகு தானே 2ஆவது திருமணம் செய்து கொண்டீங்க. அதோடு வாழ்நாள் முழுவதும் அப்படியே இருந்துவிட முடியாது. அப்படியிருக்கும் போது நீங்கள் திருமணம் செய்ததது சரி தான் என்று மாமியாரிடமிருந்து கார்த்திக்கிற்கு பாராட்டு குவிகிறது. இதனால், சந்திரகலா ஏமாந்து போகிறார்.
கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு
எப்படியாவது கார்த்திக் பற்றிய உண்மையை சொல்லி, அவரை வீட்டைவிட்டு வெளியேற்றிட வேண்டும் என்று திட்டம் போட்டார். அதனை இப்போது சாமுண்டீஸ்வரியே காலி பண்ணிவிட்டார். இதைத் தொடர்ந்து சந்திரகலா மற்றொரு திட்டம் போடுகிறார். அதாவது, சாமுண்டீஸ்வரி புதிய கம்பெனி ஒன்றை தொடங்க திட்டமிட்ட நிலையில், சாமுண்டீஸ்வரையி ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிடுகின்றனர். ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரியை கொன்று விடலாம் என முடிவெடுக்கின்றனர்.
கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்
அதற்காக திட்டமும் போட்டு கொல்ல முயற்சியும் நடக்கிறது. ஆனால், அதன் பிறகு என்ன நடக்கிறது? சாமுண்டீஸ்வரி காப்பாற்றப்பட்டாரா? இல்லையா? என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியல். அதே போன்று தான் ஆசையாக காதலித்து வரும் தனது கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்து அவருடைய ரியாக்ஷன் எப்படி இருந்தது? இது போன்று பல சுவாரஷ்யங்களுடன் கார்த்திகை தீபம் 2 சீரியலை கண்டு ரசிக்கலாம்.