அதற்குள் ஓடிடி - க்கு போன கார்த்தியின் விருமன் ...எப்ப ரிலீஸ் தெரியுமா?
விருமன் வெளியிடப்படுவதை அமேசான் நிறுவனம் தங்களது சோசியல் மீடியாவில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
viruman
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் விருமன் இந்த படத்தில் அதிதி சங்கர் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். முத்தையாவின் வழக்கமான கிராமத்து நாயகன் பாணிகள் கார்த்தி தோன்றி ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்துவிட்டார். ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், கருணாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...ரன்வீரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை..இன்ஸ்டாவில் குழப்பும் தீபிகா படுகோண்
viruman
சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த மாதம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில்உருவாகி இருந்த இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வெற்றியை கண்டது.
மேலும் செய்திகளுக்கு...அடடடா..உடல் இளைத்த பின்னர் தாறுமாறாக போஸ் கொடுக்கும் வரலக்ஷ்மி சரத்குமார்
viruman
படம் 38.4 கோடிகளை வசூலாக பெற்றிருந்தது. இந்நிலைகள் விருமன் படம் ஓடிடிக்கு வரும் தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதன்படி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இந்த பட ஓடிடி ரிலீஸ் செப்டம்பர் 11ஆம் தேதி என அறிவிக்கப்ட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ இதன் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது அதோடு விருமன் வெளியிடப்படுவதை அமேசான் நிறுவனம் தங்களது சோசியல் மீடியாவில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...சூர்யா..கார்த்தியை தொடர்ந்து மாஸ் காட்டும் சிவகுமாரின் மகள் பிருந்தா..குவியும் வாழ்த்துக்கள்