MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர... இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ

சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர... இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ

தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் முதல் சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி 2 வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 27 2026, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Theatre Release Movies
Image Credit : X

Theatre Release Movies

ஏப்ரல் மாதம் முடிவுக்கு வர உள்ள நிலையில், தமிழ் சினிமா ஒரு பிரம்மாண்ட படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளது. அப்படத்தின் பெயர் கர. அதில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். அப்படத்தை போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். அப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து உள்ளார். அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 30ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக வேறு எந்த புதுப்படங்களும் தமிழில் ரிலீஸ் ஆகவில்லை.

24
This Week OTT Releases
Image Credit : Asianet News

This Week OTT Releases

Another Simple Favor 

இத்தாலியில் நடக்கும் ஒரு பிரம்மாண்ட திருமண விழாவின் நடுவே ஒரு கொலை நடக்கிறது. சஸ்பென்ஸ் மற்றும் மர்மம் நிறைந்த இந்த கதை பல திருப்பங்களுடன் பயணிக்கிறது. மே 1 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

Asterix & Obelix: The Big Fight

கால் கிராமத்தை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில், ஒரு மேஜிக் பானத்தின் ரகசியம் ஆபத்தில் சிக்குகிறது. ஆஸ்டெரிக்ஸ் மற்றும் ஒபெலிக்ஸ் இருவரும் காமெடியும் ஆக்‌ஷனும் நிறைந்த ஒரு சாகசப் பயணத்தில் இறங்குகிறார்கள். இது ஏப்ரல் 28-ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Chef’s Table: Legends

இந்த சீரிஸின் 10வது ஆண்டுவிழா ஸ்பெஷல் இது. உலகப் புகழ்பெற்ற செஃப்களான ஜேமி ஆலிவர், ஜோஸ் ஆண்ட்ரெஸ், ஆலிஸ் வாட்டர்ஸ், தாமஸ் கெல்லர் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் சமையல் கலையை இதில் காட்டுகிறார்கள். ஏப்ரல் 28ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

Exterritorial

தன் மகன் காணாமல் போனதால், முன்னாள் சிறப்புப் படை அதிகாரி ஒருவர் அமெரிக்கத் தூதரகத்திற்குள் ஊடுருவி, ஒரு பெரிய சதித்திட்டத்தை வெளிக்கொண்டு வர முயற்சிக்கிறார். ஏப்ரல் 30ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

Related Articles

Related image1
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Related image2
தனுஷின் 'கர' முதல் சிங்கிள் அவுட்! "வாய ஏ கரசாமி..." மிரட்டலான குரலில் அதிரடி பாடல்; வைரலாகும் வீடியோ! Watch Here
34
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Asianet News

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

Costao

90-களில் கோவாவில் நடந்த தங்கக் கடத்தலுக்கு எதிராகப் போராடிய ஒரு கஸ்டம்ஸ் அதிகாரியின் கதை இது. இந்த பயோபிக் படத்தில் நவாசுதீன் சித்திக்கி நடித்துள்ளார். மே 1 முதல் ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.

ராக்காச

ராக்காச கொனிடேலா நிஹாரிகா தயாரித்த 'ராக்காச' திரைப்படம் மே 1 அன்று ஓடிடியில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சங்கீத் ஷோபன் மற்றும் நயன் சாரிகா ஜோடியாக நடித்துள்ளனர். இது நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது.

El Eternauta

பியூனஸ் அயர்ஸ் நகரில் விஷத்தன்மை கொண்ட பனிப்பொழிவால் மக்கள் இறக்கின்றனர். இது ஏலியன்களின் தாக்குதல் எனத் தெரிந்ததும், உயிர் பிழைத்த சிலர் தங்கள் வாழ்க்கைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். ஏப்ரல் 30ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடிக்கு வருகிறது.

44
ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்
Image Credit : instagram

ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

The Kerala Story 2

சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் வருகிற மே 1ந் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

SonyLIV Bromance

தன் அண்ணனைத் தேடிப் புறப்படும் ஒரு இளைஞன், நண்பர்களுடன் சேர்ந்து கொச்சியிலிருந்து கூர்க் வரை ஒரு ஜாலியான பயணத்தில் சிக்குகிறான். மே 1 முதல் சோனி லிவ் ஓடிடியில் பார்க்கலாம்.

Black White & Grey - Love Kills

ஒரு பத்திரிகையாளர் தொடர் கொலைகளுக்குப் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய முயற்சிக்கிறார். இந்தத் தேடலில், காதல், துரோகம், நீதி ஆகியவற்றுக்கு இடையேயான கோடுகள் மங்கிப் போகின்றன. மே 2 முதல் சோனி லிவ் ஓடிடியில் பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தனுஷ்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
காதலர்களை கிறங்கடித்த “கண்ணுக்குள் நூறு நிலவா”.! இந்த பாட்டின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Recommended image2
Ethirneechal Today Episode : ஆதி குணசேகரனுக்கு என்னாச்சு? கதறி அழுத கதிர்; கல்லுமாதிரி நின்ற ஜனனி
Recommended image3
கருப்பு ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... சூர்யா முதல் RJB வரை பிரபலங்கள் பேசியதென்ன?
Related Stories
Recommended image1
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image2
தனுஷின் 'கர' முதல் சிங்கிள் அவுட்! "வாய ஏ கரசாமி..." மிரட்டலான குரலில் அதிரடி பாடல்; வைரலாகும் வீடியோ! Watch Here
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved