பழனி படிக்கட்டு மாதிரில இருக்கு... சிக்ஸ் பேக் உடன் மிரள வைக்கும் சூர்யா - வைரலாகும் போட்டோ
கங்குவா படத்தில் நாயகனாக நடித்து வரும் சூர்யா, தீவிரமாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் வில்லனாக நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வேறலெவலில் வைரல் ஆனது. அந்த கிளிம்ப்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் அமைந்திருந்தது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி படத்தை கைவிடுகிறதா லைகா?... கோலிவுட்டில் தீயாய் பரவும் தகவல்
கங்குவா படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை செம்ம பிட்டாக வைத்திருக்கும் நடிகர் சூர்யா, சிக்ஸ் பேக் உடற்கட்டை காட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்தபோது சூர்யா எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதென்ன பழனி படிக்கட்டு மாதிரி இருக்கு என சூர்யாவின் சிக்ஸ்பேக்கை வர்ணித்து வருகின்றனர். 48 வயதிலும் இவ்வளவு பிட்டாக இருக்கும் சூர்யாவை பார்த்து ரசிகர்கள் பிரம்மித்துப் போய் உள்ளனர்.
நடிகர் சூர்யா கடந்த 2008-ம் ஆண்டு வாரணம் ஆயிரம் படத்திற்காக முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தார். அப்போதிலிருந்து சுமார் 15 ஆண்டுகளாக அதே உடற்கட்டை அவர் மெயிண்டேன் செய்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்ததும் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. அப்படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரோலெக்ஸ் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார் சூர்யா.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் வெற்றியால் ஜவானுக்கு லாபம்... இத்தனை கோடி பிசினஸா? - தனஞ்செயன் Exclusive பேட்டி