MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கங்குவாவை கதம் பண்ணிய இயக்குனர் சிவாவின் அடுத்த படம் யாரோடு தெரியுமா?

கங்குவாவை கதம் பண்ணிய இயக்குனர் சிவாவின் அடுத்த படம் யாரோடு தெரியுமா?

சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் தோல்விமுகத்தில் உள்ள நிலையில், அவர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 15 2024, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siruthai Siva

Siruthai Siva

ஒளிப்பதிவாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய சிவா, தமிழில் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின், ஸ்ரீகாந்தின் மனசெல்லாம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுதவிர தெலுங்கிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் கடந்த 2008-ம் ஆண்டு செளர்யம் என்கிற தெலுங்கு படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து தொடர்ந்து மூன்று தெலுங்கு படங்களை இயக்கிய சிவா, கடந்த 2011-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

25
Siruthai siva, AJith

Siruthai siva, AJith

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான விக்ரமர்குடு படத்தை தான் தமிழில் சிறுத்தை என்கிற பெயரில் ரீமேக் செய்தார் சிவா. இப்படம் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சிறுத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவாவுக்கு அப்பட தலைப்பே அடைமொழியாக மாறியது. சிறுத்தை படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன அஜித், தன்னுடைய வீரம் படத்தை இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கு வழங்கினார். இப்படத்தின் மூலம் அஜித்துக்கும் சிவாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்... கங்குவா மாதிரியே இன்னும் 6 கதை வச்சிருக்கேன் - ஷாக் கொடுத்த சிறுத்தை சிவா

35
Siruthai siva, Rajinikanth

Siruthai siva, Rajinikanth

இதனால் வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தன் மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கு வழங்கினார் அஜித். விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்த சிவா, அவரை வைத்து அண்ணாத்த என்கிற கமர்ஷியல் படத்தை இயக்கினார். தங்கச்சி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது.

45
Siruthai Siva, Suriya

Siruthai Siva, Suriya

அண்ணாத்த படத்தின் தோல்வியில் இருந்து கம்பேக் கொடுக்க முடிவெடுத்த சிவா, நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா என்கிற பீரியட் பிலிம் ஒன்றை எடுக்க முடிவெடுத்தார். சுமார் 2 ஆண்டுகள் கடினமாக உழைத்து கங்குவா படத்தை எடுத்து முடித்தது மட்டுமின்றி, அப்படத்தின் ரிலீஸுக்கு முன்னர் ஆஹா, ஓஹோனு புரமோஷன் பண்ணினார். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று ரிலீஸ் ஆன கங்குவா படத்தை காண சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

55
Siruthai Siva next Movie with Ajith Kumar

Siruthai Siva next Movie with Ajith Kumar

படம் மோசமாக இருந்ததால் ரசிகர்கள் அப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் அப்படத்தில் நடிகர் அஜித் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதியானால் நடிகர் அஜித்துடன் சிவா இணையும் 5-வது படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அடுத்த அஞ்சான் ரேஞ்சுக்கு ட்ரோல் செய்யப்படும் கங்குவா! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறுத்தை சிவா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved