- Home
- Cinema
- BiggBoss Tamil 5: இந்த வாரம் மிக குறைவான வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டுக்கு கும்பிடு போட போவது இவரா?
BiggBoss Tamil 5: இந்த வாரம் மிக குறைவான வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டுக்கு கும்பிடு போட போவது இவரா?
பிக்பாஸ் நிகழ்ச்சியை (Biggboss tamil 5 ) இந்த வாரம் யார் தொகுத்து வழங்குவார் என்கிற மிகப்பெரிய குழப்பம் ஒரு பக்கம் நீடித்து வந்தாலும், இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று யார் வெளியேற உள்ளார் என்கிற தகவலும் வெளியாக துவங்கி விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி விளையாட்டை பொறுத்தவரை சாமர்த்தியமும் முக்கியம், சாதுர்யமும் முக்கியம், இரண்டையும் சமமாக கையாண்டு 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதும், வெற்றி பெறுவதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
வெளியில் இருந்து பார்ப்பதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் விளையாட்டுகள் ரசிக்கும் படி இருந்தாலும், எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல், பார்த்த முகங்களையே பார்த்து கொண்டு எந்நேரமும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போட்டியாளர்களின் மனநிலை வேறுமாதிரியாகவே இருக்கும்.
எனவே பிக்பாஸ் வீட்டில் இருப்பது எவ்வளவு சவாலானது என்பது பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வருபவர்களை கேட்டால் மட்டுமே தெரியும்.
மற்ற வாரங்களை விட இந்த வாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சற்று குழப்பமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இதற்க்கு முக்க்கிய காரணம் தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இந்த வாரம் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது தான் மிகப்பெரிய பஞ்சாயத்தாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கமல்ஹாசனே பிக்பாஸ் நிகழ்ச்சியை மருத்துவமனையில் இருந்தபடி தொகுத்து வழங்குவார் என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பினர் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறி வருகிறார்கள்.
எனவே இன்றைய தினம் புரோமோ அல்லது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான், இது குறித்து உண்மை தகவல் வெளியாகும்.
இது ஒரு புறம் இருக்க, தற்போது இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற உள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில்... இதுவரை பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருக்கும் இடமே தெரியாமல் விளையாடிவரும் மருத்துவரும், பாப் சிங்கருமான ஜக்கி பெரி தான் இந்த வாரம் வெளியேறுவார் என கூறப்படுகிறது.
இதுவரை பிக்பாஸ் ரசிகர்கள் கணித்தது போலவே ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேறிவரும் நிலையில், இந்த வார கணிப்பும் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.