இதெல்லாம் கமல் லேடி வாய்ஸில் பாடிய பாடல்களா! இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!!
உலகநாயகன் கமல்ஹாசன் பெண் குரலில் பாடி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய பாடல்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Kamalhaasan
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது கமல்ஹாசன் தான். சிறுவயதிலேயே நடிக்க வந்த கமல், வளர வளர தன்னுடைய சினிமா அறிவையும் வளர்த்துக் கொண்டார். குறிப்பாக தமிழ் சினிமாவில் பல்வேறு புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்திய பெருமை கமலையே சேரும். இன்றளவும் தன்னை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றபடி அப்டேட்டிலேயே வைத்திருக்கும் கமல்ஹாசன், கடந்த மாதம் கூட ஏஐ குறித்து படிக்க அமெரிக்கா சென்றிருந்தார்.
Kamal Female Voice Songs
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமின்றி படம் இயக்குவது, பாடல்கள் எழுதுவது, பாடுவது, படங்கள் தயாரிப்பது என சினிமாவில் ஒரு ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக இசையின் மீது கமலுக்கு ஆர்வம் அதிகம். இதனால் தன் படங்களுக்கு மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களுக்கும் பாடல்கள் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் கமல்ஹாசன். அண்மையில் கூட கார்த்தியின் மெய்யழகன், சிவகார்த்திகேயனின் அமரன் போன்ற படங்களுக்கு பாடல்கள் பாடி இருந்தார் கமல்.
இதையும் படியுங்கள்... இலங்கையில் கொடிகட்டி பறந்த சிவாஜி.. ஒரே படத்தில் அவரை ஓவர்டேக் செய்த கமல் - எந்த படம் அது?
Rukku Rukku Song
இந்த நிலையில், அவர் பாட்டு பாடுவதில் காட்டிய வித்தியாசங்கள் பற்றி பார்க்கலாம். அதன்படி கதைக்கு தேவைப்படும்படி தன்னுடைய குரலை மாற்றிப் பாடுவதிலும் கில்லாடியாக இருந்து வந்துள்ளார் கமல். கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்திலும் நடித்திருப்பார் கமல்ஹாசன். அவ்வை சண்முகியாக கமல் ருக்கு ருக்கு என்கிற பாடலை பாடும்படியான காட்சி படத்தில் இருக்கும். அதற்காக தன்னுடைய குரலை மாற்றி அச்சு அசல் பெண் பாடுவது போலவே பாடி இருப்பார் கமல். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பெண் குரலிலும் கமல் ஸ்ருதி மாறாமல் பாடி அசத்தி இருப்பார். இப்பாடலுக்கு தேவா இசையமைத்து இருந்தார்.
Mukunda mukunda song
இதேபோல் கமல்ஹாசன் பெண் குரலில் பாடி சூப்பர் ஹிட் ஆன மற்றொரு பாடலும் உண்டு. அந்தப் பாடல் தான் தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற முகுந்தா முகுந்தா பாடல். ஹிமேஷ் ரேஷ்மியா இசையமைத்த இந்த பாடலை சாதனா சர்கம் பாடி இருப்பார். இப்பாடலில் ஒரு சில விநாடிகள் மட்டும் மூதாட்டி பாடுவது போன்று இருக்கும். அந்த வரிகளை கமல்ஹாசன் தான் பாடி இருந்தார். அந்த மூதாட்டி கேரக்டரில் கமல் நடித்திருந்தது மட்டுமின்றி அதற்காக குரலை மாற்றி பாடலும் பாடி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தது.
இதையும் படியுங்கள்... "மர்மயோகி முதல் தேவர் மகன் 2 வரை" கமல் கடைசி நொடியில் கைவிட்ட டாப் 4 டக்கர் படங்கள்!