MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் கமல்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் கமல்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஏற்கனவே 'விக்ரம்' படத்தில் நடித்த உலகநாயகன் கமலஹாசன், மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Feb 08 2025, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாநரகம் படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்

மாநரகம் படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்

2016 ஆம் ஆண்டு 'அவியல்' என்கிற அந்தாலஜி திரைப்படத்தில், 'களம்' என்கிற தொடரை இயக்கி கவனம் பெற்றவர் தான் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர்ந்து முக்கோண காதல் கதையாக எடுக்கப்பட்ட 'மாநகரம்' படத்தை 2017 ஆம் ஆண்டு இயக்கினார். இதன் பின்னர் நடிகர் கார்த்தியை வைத்து, 2019 ஆம் ஆண்டு இவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
லோகேஷ் கனகராஜின் வெற்றி படங்கள்

லோகேஷ் கனகராஜின் வெற்றி படங்கள்

எந்த ஒரு பாடலும், ஹீரோயினும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரே நாளில் எடுப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம், அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். இதன் பின்னர் உலகநாயகன் கமலஹாசனை வைத்து, லோகேஷ் இயக்கிய 'விக்ரம்'  திரைப்படம் 60 முதல் 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு,  ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

நியூ என்ட்ரி கொடுக்கும் 3 பிரபலங்கள் - எதிர்பாராத திருப்பங்களுடன் 'அண்ணா' சீரியல் எபிசோட்!

35
விக்ரம் படத்தின் வெறித்தனமான வெற்றி

விக்ரம் படத்தின் வெறித்தனமான வெற்றி

மேலும் தன்னுடைய திரைப்படங்களை, லோகேஷ் கனகராஜ் (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) என்பதன் அடிப்படையில் இயங்கி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது. மேலும் தற்போது 'கூலி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், இந்த படம் முடிந்த கையோடு நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி 2' படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

45
கைதி 2 படத்தில் கமல் இணைகிறாரா?

கைதி 2 படத்தில் கமல் இணைகிறாரா?

இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தை இயக்கி தயாரித்த எஸ் ஆர் பிரபு இந்த திரைப்படத்தையும் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 'கைதி  2' திரைப்படத்தில் கதாநாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறபடுகிறது.

சர்ச்சையை ஏற்படுத்திய 'பேட் கேர்ள்' படத்திற்கு NETPAC சர்வதேச விருது!

55
லோகேஷ் கனகராஜ் படத்தில் கமல் ஹாசன்:

லோகேஷ் கனகராஜ் படத்தில் கமல் ஹாசன்:

முந்தைய பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இந்த பாகத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின் படி, நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசனும் நடிக்க உள்ளாராம். கமலஹாசன் காண கதாப்பாத்திரையை லோகேஷ் கனகராஜ் அவரிடம் கூறியுள்ளதாகவும் இதை கேட்டதுமே, எப்போது சூட்டிங் என முடிவு செய்துவிட்டு சொல்லுங்கள் நான் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என கமலஹாசன் நம்பிக்கையாக கூறிவிட்டாராம். எனவே கமல்ஹாசன் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved