MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • BiggBoss Tamil 5: மருத்துவமனையில் அட்மிட் ஆன ஆண்டவர்! அடுத்த வாரம் பிக்பாஸ் நிலை என்ன?

BiggBoss Tamil 5: மருத்துவமனையில் அட்மிட் ஆன ஆண்டவர்! அடுத்த வாரம் பிக்பாஸ் நிலை என்ன?

பிரபல நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் (Kamalhassan) தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை (Biggboss tamil 5) யார் தொகுத்து வழங்குவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 22 2021, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதுமே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது, நடிகர் கமல்ஹாசனின் முகம் தான். முதல் சீசனில் இருந்து தற்போது வரை இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு செல்வதில் வல்லவராக இருக்கிறார்.

 

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

மக்களின் கருத்துகளையும், அவர்களது கேள்விகளையும்... நெற்றி பொட்டில் அடித்தது போல் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் எழுப்பி விளாசி வருபவர். அதே நேரம் எந்த இடத்தில் போட்டியாளரை விட்டுக்கொடுக்க கூடாது என்பதையும் நன்கு தெரிந்தவர்.

 

38

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய அரசியல் கருத்துகளையும் இவர் மறைமுகமாக  எடுத்து வைத்து வருகிறார். கடந்த சீசனை விட இந்த சீசனில் அரசியல் கருத்துக்கள் சற்று குறைத்திருப்பதையும் பார்க்கமுடிகிறது.

 

48

இந்நிலையில் நேற்றைய தினம், இசை வாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். எப்படியும் இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் செய்த சில சிலுமிஷம் மற்றும் வீணாக பிரச்சனை வாங்கியதால் வெளியேறினார்.

 

58

இந்த வாரம் படு ஜோராக பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றாலும், அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா? என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

 

68

சற்று முன் கமல் தரப்பில் இருந்து வெளியான ஒரு அறிவிப்பில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். என கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.

 

78

பொதுவாக கொரோனா தொற்று இருந்தால் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகியுள்ள நிலையில், கமல்ஹாசன்... அடுத்த வார நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? அல்லது அவருக்கு பதில் யாரேனும் கலந்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

88

ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில காரணத்தால் நாகர்ஜுனா கலந்து கொள்ளாததால், ஆருக்கு பதில் அவருடைய மருமகளான சமந்தா தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது ஜனனியா? சாட்டையை சுழற்றும் போலீஸ்; சிக்கப்போவது யார்?
Recommended image3
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி போட்ட கண்டிஷன்... நீத்துவால் புது சிக்கலில் மாட்டப்போகும் ஸ்ருதி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved