- Home
- Cinema
- Kajal Aggarwal Baby Photo : தனது மகனின் முதல் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால் !
Kajal Aggarwal Baby Photo : தனது மகனின் முதல் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால் !
Kajal Aggarwal Baby Photo : பிரபல நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ள அவரது ஆண் குழந்தை நீலுடனான முதல் படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

kajal aggarwal
தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, அஜித், தனுஷ் என பல முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என கொடிகட்டி பறந்து வந்த காஜல் கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
kajal aggarwal
நடிகை காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கௌதம் கிட்ச்லு ஆகியோர் தங்களது முதல் ஆண் குழந்தையை ஏப்ரல் 2021 இல் வரவேற்றனர். அவர் தனது மகன் நீலின் முதல் படத்தை மே மாத தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ஆனால் குழந்தையின் முகம் படத்தில் தெரியவில்லை. ஆனால் காஜல் அகர்வால் இப்போது குழந்தையின் முகம் ஓரளவிற்கு இருக்கும் மற்றொரு படத்தைப் பகிர்ந்துள்ளார், இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
kajal aggarwal
அன்னையர் தினத்தில் குழந்தையின் படங்களைப் பகிரும் போது, நடிகை தனது தாயார் வினய் அகர்வாலுக்காக ஒரு கவிதையை எழுதினார். அதில் அவர் ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு, தனது அம்மா கடந்து வந்த பயணத்தைப் புரிந்துகொள்கிறார் என்று எழுதுகிறார். இப்போது, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது குழந்தையுடன் அழகான படத்தைப் பகிர்ந்து கொண்ட காஜல், "#நீல்கிட்ச்லு என் வாழ்க்கையின் காதல். #இதய துடிப்பு என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.