கைதி 2 படம் கண்டிப்பா வரும்… LCU குறித்து லோகேஷ் கனகராஜ் தந்த சூப்பர் அப்டேட்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி 2 பற்றியும், ரஜினி-கமல் படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தையும், தனது அடுத்த தெலுங்குப் படம் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

கைதி 2 பற்றி லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்
தென்னிந்திய ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ‘கைதி 2’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் தான் அவருக்கான பெரிய திருப்புமுனை. அதே படத்திலிருந்து தான் இன்று பெரும் ஹைப்புடன் பேசப்படும் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) உருவானது. ஆனால் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்திற்குப் பிறகு கைதி 2 தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில், லோகேஷ் தெலுங்கு பக்கம் செல்லப் போவதாக செய்திகள் வந்ததால், கைதி 2 “கைவிடப்பட்டதா?” என்ற பேச்சு கோலிவுட்டில் அதிகமாக வலம் வந்தது.
லோகேஷ் கனகராஜ் விளக்கம்
இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தான் கைதி 2 குறித்து நேரடியாக அப்டேட் கொடுத்து அந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசும்போது, அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் புதிய தெலுங்குப் படத்திற்குப் பிறகு தான் கைதி 2 தொடங்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் அதிக சம்பளம் கேட்டு அது கிடைக்காததால் அல்லு அர்ஜுன் படத்திற்கு சென்றேன் என்கிற செய்திகள் தவறு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ரஜினி-கமல் படம் ஏன் கைவிடப்பட்டது?
அதே போல் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு பற்றியும் அவர் பேசினார். தாம் ஒரு ஆக்ஷன் கதையை சொன்னபோது இருவருக்கும் அது பிடித்ததாகவும், ஆனால் சமீப காலத்தில் அவர்கள் பல ஆக்ஷன் படங்களில் நடித்ததால் “சிம்பிளான” கதையை அவர்கள் விரும்புவதாகவும் லோகேஷ் கூறினார். ஆனால் தன்னால் அப்படிப்பட்ட கதையை எழுத முடியவில்லை என்பதாலேயே அந்த ப்ராஜெக்டில் இருந்து விலகினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் அல்லு அர்ஜுன் படம்
இப்போது லோகேஷ் இயக்கும் அல்லு அர்ஜுன் (AA23) படம் இந்த ஆண்டு ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் இந்த படத்திற்கு சுமார் ரூ.75 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பேசப்படுகிறது. இதற்கு பிறகும் LCU இன்னும் முடிவடையாது, கைதி 2 உட்பட இன்னும் பல படங்கள் வரும் என்று லோகேஷ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இது சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட்டாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

