MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 68 ஹீரோயின் இவரா! 23 வருஷத்துக்கு முன் லிப்கிஸ் அடித்த நடிகையோடு மீண்டும் ரொமான்ஸ் பண்ண தயாராகும் விஜய்?

தளபதி 68 ஹீரோயின் இவரா! 23 வருஷத்துக்கு முன் லிப்கிஸ் அடித்த நடிகையோடு மீண்டும் ரொமான்ஸ் பண்ண தயாராகும் விஜய்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 08 2023, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2000 நடனக் கலைஞர்களுடன் விஜய் நடிக்கும் மாஸான குத்துப் பாடல் காட்சியை தான் தற்போது படமாக்கி வருகின்றனர். இப்பாடலை அனிருத் உடன் சேர்ந்து பிக்பாஸ் பிரபலம் அசல் கோளாறு பாடி இருக்கிறாராம். 

24

இப்படி லியோ பட ஷூட்டிங் ஒரு பக்கம் படுஜோராக நடைபெற்று வரும் வேளையில், மறுபக்கம் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள தளபதி 68 படத்தின் வேலைகளும் படு பாஸ்ட் ஆக நடைபெற்று வருகிறதாம். இப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கப்போகிறார் என்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே அறிவித்துவிட்டனர். அதேபோல் ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த பிரம்மாண்ட படத்தை தயாரிக்க உள்ளார் என்கிற அறிவிப்பும் ஏற்கனவே வந்தாச்சு.

இதையும் படியுங்கள்... தெலுங்கில் ஒரு சூர்யா - ஜோதிகா! நிச்சயதார்த்த தேதியோடு வாரிசு நடிகர் உடனான காதலை அறிவித்த லாவண்யா திரிபாதி

34

அடுத்தக்கட்டமாக தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வி தான் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த பட்டியலில் ஏற்கனவே பல்வேறு நடிகைகளின் பெயர் அடிபட்டது. அந்த வகையில் முதலில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அடுத்ததாக தமிழில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. பின்னர் அதெல்லாம் வதந்தி என தெரியவந்தது.

44

இந்த நிலையில், தற்போது தளபதி 68 ஹீரோயின் பற்றி ஒரு ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒருவேளை இந்த கூட்டணி உறுதியானால் அவர் இணையும் மூன்றாவது படமாக இது அமையும், இதற்கு முன்னர் விஜய்யும், ஜோதிகாவும் இணைந்து குஷி, திருமலை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக 23 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன குஷி படத்தில் இருவரும் லிப்லாக் சீனில் நடித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... டபுள் ட்ரீட் கன்பார்ம்! விஜய் பிறந்தநாளன்று சர்ப்ரைஸாக வரவுள்ள லியோ & தளபதி 68 அப்டேட்ஸ் என்னென்ன? முழு விவரம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image2
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Recommended image3
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved