janhvi kapoor : டவுசருடன் பொது வெளியில் ஜான்வி கபூர்...வைரல் போட்டோஸ் இதோ
அறிமுகமாகி சில காலங்களிலேயே ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சில விருதுகளை தன் சொந்தமாக்கி உள்ளார்.

janhvi kapoor
தென்னிந்திய சினிமா உலகில் கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரும் மற்ற பிரபல தயாரிப்பாளரான போனி கபூருக்கும் ஜான்விகபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உண்டு. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களும் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகிவிட்டனர்.
janhvi kapoor
இதில் ஜான்விக் கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு தடக் என்னும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதே ஆண்டு அவரது தாயாரான ஸ்ரீதேவியும் மறைந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...raja rani 2 : சந்தியா போட்ட முடிச்சை அவிழ்ப்பாரா சரவணன்.. இன்றைய எபிசோட்
janhvi kapoor
ஜான்விகபூர் தற்போது அனைத்திலும் இருந்து விடுபட்டு தனது தாயின் இடத்தை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் இவர் தோன்றாவில்லை.
janhvi kapoor
இருந்தும் அனைத்து மொழிகளிலும் ஜான்வி கபூர் பிரபலமாகவே இருந்து வருகிறார். பிரபல நடிகர் ஸ்ரீதேவியின் மகள் என்பதற்காக மற்ற மொழிகளில் இவர் அறிமுகமானவராக இருந்தபோதிலும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் தான் மேலும் பிரபலமாக்கியது என்றே கூறலாம்.
janhvi kapoor
சேலை மீது அதிக ஆர்வம் கொண்ட ஜான்வி சேலை, தாவணி, பாவாடை உட்பட பிகினி வரை அனைத்து விதமான உடைகளையும் அணிந்து கவர்ச்சியான போஸ்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இவரது தங்கை குஷி கபூரும் தற்போது தனது அக்கா போலவே ஹாட் போட்டோக்களை எடுத்து சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.
janhvi kapoor
கடந்த ஆண்டு ஜான்வி நடிப்பில் குட் லக் ஜெரி படம் வெளியாகியிருந்தது. இந்த படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா என்கிற பெயரில் வெளியான படத்தின் ரீமேக் ஆகும். இதன் மூலம் பல பாராட்டுகளையும் பெற்றிருந்தார் ஜான்விஸ் கபூர்.
janhvi kapoor
தற்போது தனது தந்தையின் தயாரிப்பில் மிலி அதோடு பவால், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அறிமுகமாகி சில காலங்களிலேயே ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சில விருதுகளை தன் சொந்தமாக்கி உள்ளார்.
janhvi kapoor
மற்ற மொழிகளிலும் தடம் பதிக்கும் ஐடியாவை வைத்துள்ள இவரை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது இவர் ஜிம்மில் டவுசர் அணிந்து வெளியில் வந்த காட்சிகளுக்கான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.