- Home
- Cinema
- இந்திய சினிமாவையே மிரள வைத்த ஜன நாயகன்! ஒரே நாளில் 83 மில்லியன் வியூஸ் – வேட்டைக்கு ரெடியான தளபதி!
இந்திய சினிமாவையே மிரள வைத்த ஜன நாயகன்! ஒரே நாளில் 83 மில்லியன் வியூஸ் – வேட்டைக்கு ரெடியான தளபதி!
Jana Nayagan 24 Hours YouTube Records : ஜன நாயகன் டிரைலர் வெளியான நிலையில் இப்போது உலக சாதனை படைத்து வருகிறது. அது என்ன என்று பார்க்கலாம்.

Jana Nayagan 83 Million Views Record
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. எச் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார். கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
Jana Nayagan 24 Hours YouTube Records
விஜயின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் திரைப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு, ஆர்வமும் அதிகமாகவேஉள்ளது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகியது. அதற்கு ஜனநாயகன் பட குழு வெளியிட்டு இருந்தது. போட்டோக்கள் சிறு சிறு வீடியோக்கள் மூலம் மலேசியாவில் இந்த ஆடியோ லான்ச் பட குழு மற்றும் ரசிகர்களால் வெளிவந்தது.
ஜனநாயகன் திரைப்படத்தின் டீசர் வெளியீடு:
ஜன நாயகன் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் youtube இல் மட்டும் டீசரை பார்த்தவர்கள் மில்லியன் களக்கில் உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டீஸருக்கே இப்படி என்றால் படம் வெளியானால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இன்ஸ்டாகிராமில் 31 மில்லியன் வியூவர்ஸ்கள் டீசரை கண்டு ரசித்துள்ளனர். யூட்யூபில் 83.7 மில்லியன் வியூவர்ஸ்கள் ஜனநாயகன் திரைப்படத்தின் டீசரை கண்டு அட்டகாசமான வெற்றியை தடம் பதித்துள்ளனர் என்றே கூறலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.