MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? புரோமோஷனை தொடங்கிய ஜன நாயகன் டீம்!

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? புரோமோஷனை தொடங்கிய ஜன நாயகன் டீம்!

Jana Nayagan Promotions in Malaysia Airlines: விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜன நாயகன் புரோமோஷனை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Dec 02 2025, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : libinbahulayan Official Instagram

எந்த ஒரு பெரிய நடிகர், நடிகைகளின் படங்களாக இருந்தால் தயாரிப்பு நிறுவனம் புரோமோஷனுக்கான பல விதமான யுக்திகளை கையாள்வது வழக்கம். அதில் ஒன்று தான் விமானம். இதில், பட போஸ்டர் ஒட்டி புரோமோஷன் செய்வது வழக்கம். இது மாஸ் நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே சாத்தியம். இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு இது போன்று படக்குழுவினர் விமானங்களில் போஸ்டர்களை ஒட்டி விளம்பரம் செய்வார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Image Credit : libinbahulayan Official Instagram

அப்படித்தான் இப்போது கேவிஎன் நிறுவனமும் விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு செய்திருக்கிறது. எப்படி என்ன செய்திருக்கிறது, எங்கு நடந்திருக்கிறது என்பது பற்றி முழுமையாக பார்க்கலாம். இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடித்துள்ள படம் தான் ஜன நாயகன். தெலுங்கு சினிமாவில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம் என்று சொல்லப்படுகிறது.

38
Image Credit : libinbahulayan Official Instagram

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இது அவரது கடைசி படம். தளபதி63 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ஜன நாயகன் என்று அதிகாரப்பூர்வ டைட்டில் வைக்கப்பட்டது. இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

48
Image Credit : thalapathy vijay instagram

ஜன நாயகன் படம் வரும் 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான தளபதி கச்சேரி ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வைப் செய்யப்பட்டது. முழுக்க முழுக்க அரசியல் மற்றும் ஆக்‌ஷன் ரெண்டும் கலந்த கலவையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

58
Image Credit : libinbahulayan Instagram

ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படக்குழுவினர் ஜன நாயகன் தொடர்பாக ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஜன நாயகன் இசை வெளியீடு நடந்தால் சிக்கல் ஏற்படக் கூடும் என்பதற்காக ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தயாரிப்பு நிறுவனம் மலேசியாவில் நடத்துகிறது. வரும் 27ஆம் தேதி புக்கீட் ஜலீல் மைதானத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

68
Image Credit : KVN Productions

இந்த மைதானத்தில் கிட்டத்தட்ட 85 ஆயிரம் முதல் 87 ஆயிரம் பேர் வரையில் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடி என்ற சூழலில் தற்போது வரையில் 60 ஆயிரத்திற்கும் அதிகமாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில் இதன் மூலமாக ரூ.250 கோடிக்கும் அதிகமாக ஜன நாயகன் வருவாய் ஈட்டியுள்ளது.

78
Image Credit : libinbahulayan Official Instagram

அதோடு படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரூ.250 கோடி வசூல் குவித்த சாதனையை ஜன நாயகன் படைத்துள்ளது. இன்னும், ஸ்டேட்லைட், ஓடிடி உரிமைகள் என்று இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் படம் எப்படியும் ரூ.1000 கோடி வசூல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் வெளியாகும் முதல் படமே வெற்றி படமாகவும் அமையும் என்று தெரிகிறது.

88
Image Credit : libinbahulayan Official Instagram

இந்த நிலையில் தான் தயாரிப்பு நிறுவனம் மலேசியாவில் புரோமோஷனை தொடங்கியுள்ளது. மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஜன நாயகன் பட போஸ்டரை ஒட்டி விளம்பரம் செய்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டிவி.கே. விஜய்
ஜன நாயகன்
தளபதி விஜய்
ஜன நாயகன் வெளியீட்டு தேதி
ஜனநாயகன்
பூஜா ஹெக்டே
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved