அக்கட தேசத்திலும் அடித்து நொறுக்கும் ஜெயிலர்... ரஜினி படத்தால் வாஷ் அவுட் ஆன சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் ஜெயிலர் படத்தால் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் திரைப்படம் வாஷ் அவுட் ஆகி உள்ளது.
Bholaa shankar, Jailer
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் ஷிவ ராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்ததன் பலனாக இப்படம் கர்நாடகா மற்றும் கேரளாவிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதனால் ஒரே வாரத்தில் இப்படம் உலகளவில் ரூ.375 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக் குவித்து உள்ளது.
Jailer
ஜெயிலர் படத்துக்கு போட்டியாக ஆந்திராவில் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் திரைப்படம் களமிறக்கப்பட்டது. இதனால் ஆந்திராவில் ஜெயிலர் பட வசூலுக்கு சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட ரிலீஸுக்கு பின் நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. ஏனெனில் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த போலா ஷங்கர் திரைப்படம் மோசமான விமர்சனங்கள் காரணமாக படு தோல்வியை சந்தித்துள்ளது.
இதையும் படியுங்கள்... லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்த படம்... மொட்டை தலையுடன் மாஸ் லுக்கிற்கு மாறிய விக்ரம் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
Bholaa shankar, Jailer
அப்படம் முதல் நாளிலேயே ரூ.16 கோடி வசூலித்தாலும், நெகடிவ் விமர்சனங்கள் காரணமாக போகப்போக வசூல் குறைய தொடங்கியது. இப்படம் 7 நாள் முடிவில் ரூ.28 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. ஆனால் அதற்கு போட்டியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் மொத்தமாக ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. போலா ஷங்கர் வசூலை விட டபுள் மடங்கு வசூலித்து இருக்கிறது.
ஜெயிலர் படத்தால் ஆந்திராவில் போலா ஷங்கர் திரைப்படம் வாஷ் அவுட் ஆகி உள்ளது. அங்கு போலா ஷங்கர் திரையிடப்பட்ட பெரும்பாலான திரையரங்குகளில் ஜெயிலர் படம் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளன. சிரஞ்சீவி நடித்த போலா ஷங்கர் திரைப்படம் தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இசை மழையில் நனைய தயாரா... சென்னையில் மழையால் தடைபட்ட இசை நிகழ்ச்சிக்கான புது தேதியை அறிவித்த ஏ.ஆர்.ரகுமான்