- Home
- Cinema
- Jai Bhim oscar nomination : ஆஸ்கர் இறுதிப்போட்டியில் ‘ஜெய் பீம்’- அடிச்சு சொல்லும் பிரபலம்.. வைரலாகும் டுவிட்
Jai Bhim oscar nomination : ஆஸ்கர் இறுதிப்போட்டியில் ‘ஜெய் பீம்’- அடிச்சு சொல்லும் பிரபலம்.. வைரலாகும் டுவிட்
ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் படங்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. மொத்தம் 10 படங்கள் அந்த இறுதிப்பட்டியலில் இடம்பெறும். அதில் ஜெய் பீம் படமும் ஒன்றாக இருக்குமா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. ஓடிடி தளத்தில் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாள்) நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. குறிப்பாக அண்மையில் ஆஸ்கர் கமிட்டியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம்பெற்றது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம்பெறுவது இதுவே முதன்முறை. மேலும் 94-வது ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் படங்களின் பட்டியலில் ஜெய் பீம் படமும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் படங்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. மொத்தம் 10 படங்கள் அந்த இறுதிப்பட்டியலில் இடம்பெறும். அதில் ஜெய் பீம் படமும் ஒன்றாக இருக்குமா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.
இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, ஆஸ்கர் பரிந்துரை பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜாக்குலின் போட்டுள்ள டுவிட் அமைந்துள்ளது. பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில், ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருக்கும் படங்களில் எது உங்களை வியப்படைய செய்யும்? என ஜாக்குலினிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் ‘ஜெய் பீம்’ என பதிலளித்துள்ளார். இதன்மூலம் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதிலிருந்து ஆஸ்கர் கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும்.