MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடிக்கு திருமணம் முடிந்துவிட்டதா? - இணையத்தில் காட்டுத்தீ போல் பரவும் போட்டோ

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடிக்கு திருமணம் முடிந்துவிட்டதா? - இணையத்தில் காட்டுத்தீ போல் பரவும் போட்டோ

நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் மணக்கோலத்தில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. 

1 Min read
Author : Ganesh A
Published : Nov 22 2022, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இப்படங்களின் வெற்றிக்கு இவர்களது கெமிஸ்ட்ரியும் ஒரு முக்கிய காரணம். இப்படங்கள் ரிலீசுக்கு பின் இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின.

24

அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியானதால், இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை தான் என்றே நெட்டிசன்கள் உறுதி செய்துவிட்டனர். சமீபத்தில் கூட இருவரும் ஜோடியாக மாலத்தீவு சென்றதாக கூறப்பட்டு வந்தது. இவ்வாறு இவர்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இதையும் படியுங்கள்... இப்போ காசு.. பணம் எல்லாம் இருக்கு... ஆனா! சிறுவயதில் பட்ட கஷ்டங்களை பற்றி பேசி கலங்கிய ராஷ்மிகா

34

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அதிகளவில் நெகடிவிட்டு பரப்பப்பட்டு வருவதாக நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். அதில் சினிமா வட்டாரத்தில் தான் நட்புடன் பழகுவதையும் தவறாக சித்தரிக்கப் படுவதாக குறிப்பிட்டு இருந்தார். 

44

இந்நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் மணக்கோலத்தில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இது அவர்களது திருமண புகைப்படம் என நினைத்து சில வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். ஆனால் உண்மையில் அது ஒரு எடிட் செய்த புகைப்படம். அது தெரியாமல் பலரும் அதனை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நானும் எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்குறது... ட்ரோல் செய்தவர்களை வெளுத்துவாங்கிய ராஷ்மிகா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajith Love Story: அஜித் லவ் ஸ்டோரி தெரியுமா?! ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடந்த உண்மை சம்பவங்கள்!
Recommended image2
நான் எதாவது பண்ணிப்பேன் - காதல் கணவரால் கண்ணீர் விட்டு கதறிய விஜய் டிவி சீரியல் ஹீரோயின்!
Recommended image3
Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா;என்ன நடந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved