MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீரியல் நடிகை உமா மகேஸ்வரி மரணத்திற்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

சீரியல் நடிகை உமா மகேஸ்வரி மரணத்திற்கு இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

'மெட்டி ஒலி' சீரியல் (Metti Oli Serial) நடிகை உமா மகேஸ்வரி (Uma Maheshwari) உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீரென மரணமடைந்த (Pass away) தகவல் சின்னத்திரை வட்டாரத்தை சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்த நிலையில் இவரது மரணத்திற்கான காரணம் குறித்து தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 17 2021, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட்டான 'மெட்டி ஒலி' சீரியலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த தொடரை இயக்கி, நடித்திருந்த திருமுருகனுக்கு ஜோடியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் உமா மகேஸ்வரி.

 

27

இதை தவிர 'மஞ்சள் மகிமை', 'கதையின் கதை', போன்ற தமிழ் சீரியல்களிலும், 'ஈ பார்கவி நிலையம்' என்கிற மலையாள தொடர்களிலும் நடித்து பிரபலமானார். சுமார் 13 வருடங்கள் சின்னத்திரையில் நிலையான இடத்தை பிடித்து நடித்து வந்த உமா மகேஸ்வரி, 'வெற்றிகொடிக்கட்டு' போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 

37

கால்நடை மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டபின் சின்னத்திரை உலகை விட்டு விலகினார். அதே நேரத்தில் 'ஸ்ரீ சாய் பொத்திக்' ஒன்றை துவங்கி, தொழில்துறையிலும் தன்னுடைய திறமையைக் காட்டினார்.

 

47

நீண்ட இடைவெளிக்குப்பின் சீரியல்களில் நடிக்காவிட்டாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கிச்சன் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் இரண்டு முறை கிட்சன் ஆப் தி வீக் வாங்கி தன்னுடைய சமையல் திறமையை காட்டி நடுவர்களை அசர வைத்தார்.

 

57

இவருக்கு 40 வயதே ஆகும் நிலையில், திடீர் என இவர் உடல்நல குறைவு காரணமாக இறந்து விட்டதாக தகவல் வெளியானது. என்ன பிரச்சனையால் இறந்தார் என்ற காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.

 

 

67

சமீப காலமாகவே மஞ்சள் காமாலை நோயால் இவர் அவதிப்பட்டு வந்ததாகும், இதற்க்கு உரிய சிகிச்சை எடுத்து வந்த போதிலும் தற்போது உயிரிழந்துள்ளார் இந்த தகவல் இவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

77

இவர் பல சீரியல்கள், மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை வனஜாவின் உடன் பிறந்த சகோதரி. இவரால் தான் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு உமாவிற்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved