- Home
- Cinema
- Mankatha: மங்காத்தா 2-வுக்கு இதுதான் பிள்ளையார் சுழியா?" – வசூலில் மிரட்டும் அஜித்தின் 50-வது படம்!
Mankatha: மங்காத்தா 2-வுக்கு இதுதான் பிள்ளையார் சுழியா?" – வசூலில் மிரட்டும் அஜித்தின் 50-வது படம்!
அஜித்தின் 50வது படமான மங்காத்தா ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, திரையரங்குகளில் திருவிழா கோலத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய படங்களுக்கு நிகராக வசூல் வேட்டை நடத்தி, கில்லி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

தல தீபாவளி கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரெண்ட் தற்போது உச்சத்தில் உள்ளது. அந்த வரிசையில், 'தல' அஜித்தின் 50-வது படமான மங்காத்தா, டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியானது. 2011-ல் எப்படி ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியதோ, அதே போன்றதொரு வரவேற்பை 2026-லும் இப்படம் பெற்றுள்ளது. வில்லத்தனமான நாயகன், அதிரடி பின்னணி இசை என வெங்கட் பிரபு - அஜித் கூட்டணி திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியுள்ளது.
வசூல் சாதனை விவரங்கள்
புதிய படங்களுக்கு நிகராக மங்காத்தா ரீ-ரிலீஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வர்த்தக ஆய்வாளர்களின் தகவல்படி இதுவரை கிடைத்துள்ள உத்தேச வசூல் விவரங்கள்.
முதல் நாள் வசூல் (Day 1)
இப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் ₹3.75 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்திய அளவில் இதன் முதல் நாள் வசூல் ₹4.1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சாதனையை முறியடித்த விநாயகம்
இதற்கு முன்பு விஜய்யின் 'கில்லி' ரீ-ரிலீஸ் முதல் நாளில் செய்திருந்த ₹3.50 கோடி (TN) வசூல் சாதனையை மங்காத்தா முறியடித்து, ரீ-ரிலீஸில் அதிக வசூல் செய்த படமாக முதலிடம் பிடித்துள்ளது.
மொத்த வசூல்
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சில நாட்களிலேயே இப்படம் உலகம் முழுவதும் ₹14 கோடி முதல் ₹15 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புக்கிங் சாதனை
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது மங்காத்தா.
ரசிகர்களின் கொண்டாட்டம்
திரையரங்குகள் முழுவதும் அஜித்தின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதும், திரையில் அவர் தோன்றும் போது ரசிகர்கள் நடனமாடுவதும் எனப் பெரும் ஆரவாரம் நிலவுகிறது. குறிப்பாக, சென்னை ரோகிணி மற்றும் காசி திரையரங்குகளில் திருவிழா போன்ற சூழல் காணப்பட்டது. இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் மகத், வைபவ் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் 'தீம் மியூசிக்' ஒலிக்கும் போதெல்லாம் திரையரங்குகள் அதிர்கின்றன.
"எத்தனை நாள் தான் நானும் நல்லவனாவே நடிக்கிறது"
"எத்தனை நாள் தான் நானும் நல்லவனாவே நடிக்கிறது" என்ற அஜித்தின் அந்த வசனம் இன்றும் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 'மங்காத்தா 2' எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில், இந்த ரீ-ரிலீஸ் வெற்றி அஜித்தின் மார்க்கெட் வலுவாக இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

