Corona Kumar : பேச்சு மூச்சின்றி கிடக்கும் ‘கொரோனா குமார்’... இந்த படத்தையும் கைவிடுகிறாரா சிம்பு?
Corona Kumar : சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக இருந்த கொரோனா குமார் படம் டிராப் ஆனதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் அதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சிம்புவின் மார்க்கெட் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் சிம்பு. தற்போது நடிகர் சிம்பு கைவசம் வெந்து தணிந்தது காடு, பத்து தல, மஹா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர கொரோனா குமார் படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.
இதில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தற்போது சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடித்து வருகிறார். மேலும் கவுதம் கார்த்திக், டீஜே, பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக இருந்த கொரோனா குமார் படம் டிராப் ஆனதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இப்படத்தின் மீது சிம்புவுக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தை கைவிட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதுகுறித்து தயாரிப்பு தரப்பிடம் விசாரித்தபோது, கொரோனா குமார் திரைப்படம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் இப்படம் கைவிடப்பட்டதாக வெளிவரும் தகவல் முற்றிலும் வதந்தி எனவும் தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி கதையம்சத்துடன் தயாராகும் இப்படத்தை கோகுல் இயக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்... SPB Birthday : இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி அவதரித்த தினம் இன்று