அட்ராசக்க... அஜித்தின் தக்ஷா குழுவுக்கு இந்திய ராணுவம் கொடுத்த மிகப்பெரிய புராஜெக்ட்
இந்திய ராணுவத்திற்காக ட்ரோன்கள் தயாரிப்பதற்காக அஜித் ஆலோசகராக இருக்கும் தக்ஷா குழு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், நடிப்பைத் தாண்டி பைக் ரேசிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன்கள் உருவாக்குவது உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்ஷா குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராகவும் இருந்து வந்தார். அந்த குழுவினருக்கு ட்ரோன்கள் தயாரிப்பது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குவதற்காக அஜித் நியமிக்கப்பட்டு இருந்தார்.
அஜித்தின் தக்ஷா குழு கடந்த 2018-ம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியில் பங்கேற்று இருந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த ட்ரோன் போட்டியில் பங்கேற்பதற்காக சீனா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகளுடன் இந்தியா சார்பில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்ஷா குழுவும் பங்கேற்று அசத்தியது.
இதையும் படியுங்கள்... வீட்டில் காஸ்ட்லியான நாய்களை வளர்க்கும் ஷிவானி... அதன் விலை இத்தனை லட்சமா?
இதுதவிர ஏராளமான சர்வதேச ட்ரோன் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடி வரும் தக்ஷா குழு. மாநில அளவில், ட்ரோன் தயாரிப்பில் முன்னிலை வகித்து வரும் தக்ஷா குழு, கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றியது. குறிப்பாக ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து உதவியது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு மத்திய அரசுக்கான ட்ரோன்களை தயாரிக்கவும் தக்ஷா குழு தேவாகி இருந்தது.
இந்நிலையில், அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்ஷா குழுவுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி இந்தியா ராணுவத்திற்காக ட்ரோன்களை தயாரித்து கொடுக்கும் பணிக்கு தர்ஷா குழு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த 12 மாதங்களில் இந்திய ராணுவத்திற்கு தேவையான 200 ட்ரோன்களை தக்ஷா குழு தயாரித்துக் கொடுக்க உள்ளது. இதற்காக ரூ.165 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ஓடிவந்து கட்டிப்பிடிச்ச பகத் பாசில்... ஒருவழியாக மாமன்னன் ரத்னவேலு பற்றிய சீக்ரெட்டை வெளியிட்ட மாரி செல்வராஜ்