MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • MissUniverse : உலகளவில் இந்தியா பெற்றுள்ளஅழகி பட்டங்கள்... முடி சூடிய அழகிகளின் புகைப்பட தொகுப்பு!!

MissUniverse : உலகளவில் இந்தியா பெற்றுள்ளஅழகி பட்டங்கள்... முடி சூடிய அழகிகளின் புகைப்பட தொகுப்பு!!

MissUniverse2021 : இந்தியா இதுவரை மூன்று மிஸ் யுனிவர்ஸ் பட்டங்கள், ஆறு — உலக அழகி பட்டங்கள், ஒரு - மிஸ் எர்த் கிரீடத்தை பெற்றுள்ளது.

2 Min read
Kanmani P | Asianet News
Published : Dec 13 2021, 01:44 PM IST| Updated : Dec 13 2021, 01:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Sushmita Sen

Sushmita Sen

1994 -ம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர் சுஷ்மிதா சென்.  அவர் இதற்கு முன்பு தனது 18 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை அதே ஆண்டு (1994 ) முடிசூட்டினார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்  சுஷ்மிதா சென், பின்னர் முன்னணி  பாலிவுட் நாயகியாக மிளிர்ந்தார்.

28
Aishwarya rai

Aishwarya rai

1994 -ம் ஆண்டு  மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய், அதில்  இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.  பின்னர் 1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் 1994  பட்டம் பெற்றார், பின்னர் முன்னணி  பாலிவுட் நாயகியாக உருவெடுத்தார்.

38
Diana Hayden

Diana Hayden

1997-ம்  ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற மூன்றாவது இந்தியப் பெண் டயானா ஹைடன். அந்த போட்டியின் போது அவர் மூன்று சப்டைட்டில்களை வென்றார். அவ்வாறுமூன்று டைட்டிகளை பெற்ற  ஒரே உலக அழகி இவர் மட்டும் தான்.  பின்னர் 2008 இல் ஒளிபரப்பான ஹிந்தி ரியாலிட்டி ஷோ பிக் பாஸில்  கலந்து கொண்டார்.

48
Yukta Mookhey

Yukta Mookhey

1999 -ம் ஆண்டு  மிஸ் வேர்ல்ட் வென்ற நான்காவது இந்தியப் பெண்மணி யுக்தா இந்தர்லால் முகே. இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்டாக முடிசூட்டப்பட்டார் . இவர் ஒரு முன்னாள் மாடல் மற்றும் நடிகை, மேலும் இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார்.

58
Nicole Faria

Nicole Faria

நிக்கோல் எஸ்டெல் ஃபரியா  மிஸ் எர்த் 2010 போட்டியின் வெற்றி பெற்ற ஒரே இந்திய பெண்மணியாவார். இவர் ஜான்சன் & ஜான்சனுக்கு சொந்தமான  கிளீன் & கிளியர் உட்பட பல்வேறு பிராண்டுகளுக்கான பிராண்ட் தூதராக உள்ளார். மேலும்  2018 -ல், மிஸ் எர்த் 2010 பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிக்கோலுக்கு வழங்கி கௌரவித்தார். 

68
Manushi Chhillar

Manushi Chhillar

மிஸ் வேர்ல்ட் 2017 போட்டியில் வென்றவர் மனுஷி சில்லர்.பெமினா மிஸ் இந்தியா 2017 பட்டத்தை வெற்றி பெற்றார். மிஸ் வேர்ல்ட் போட்டியில் வென்ற இந்தியாவின் ஆறாவது பிரதிநிதி சில்லர் ஆவார் 

78
priyanka chopra

priyanka chopra

மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் வென்ற ப்ரியங்கா சோப்ரா, இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு கலைஞர்களில் ஒருவராக வளம் வருபவர்.இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல பாராட்டுகளை பெற்றுள்ளார். 

88
Harnaaz Sandhu

Harnaaz Sandhu

இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான எய்லட்டில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸுக்கான போட்டியில், பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து 2021 -ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ்  பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். 

முன்னதாக Harnaaz Sandhu 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் பேக் மூலம் தனது அழகுப் போட்டி பயணத்தைத் தொடங்கினார். 21 வயதான Harnaaz Sandhu தற்போது பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.ஏற்கனவே  மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 போன்ற பல போட்டி பட்டங்களை அவர் பெற்றுள்ளார். பல பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved