சுதந்திர தின ஸ்பெஷல்... தேசபக்தியை உணர்த்தும் தமிழ் சினிமாவின் டாப் 5 திரைப்படங்கள்
76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழில் வெளியாகிய தேசபக்தி மிக்க டாப் 5 தமிழ் திரைப்படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த இந்தியா கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து ஆண்டுதோறும் ஆக்ஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் தேசபக்தியை உணர்த்தும் விதமாக வெளிவந்த படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜெய்ஹிந்த்
சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பப்படும் திரைப்படம் என்றால் அது அர்ஜுன் இயக்கி, நடித்த ஜெய்ஹிந்த் திரைப்படம் தான். பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை மிகவும் நேர்த்தியாக படமாக்கி அதில் வெற்றியும் கண்டார் அர்ஜுன். இப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ரஞ்சிதா நடித்திருந்தார்.
இந்தியன்
சுதந்திரப் போராட்டத்தை சித்தரித்து எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ‘இந்தியன்’ படமும் ஒன்று. இதில் சேனாபதி என்ற சுதந்திரப் போராட்ட வீரராக கமல்ஹாசன் நடித்தார். பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய, ‘இந்தியன்’, இந்தியாவில் உள்ள ஊழல் அமைப்பு குறித்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வேதனையைப் பற்றி பேசும் படமாக வெளிவந்தது. இப்படத்தை ஷங்கர் இயக்கி இருந்தார். தற்போது இந்தியன் 2 படமும் தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஆஸ்கர் வாங்குனதும் கார்த்திகி அம்போனு விட்டுட்டு போயிட்டா... பொம்மன் - பெல்லி தம்பதி குமுறல்
ரோஜா
காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய ஒரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் ரோஜா. பயங்கரவாதிகளிடம் சிக்கிய தனது கணவனை மீட்டெடுக்க மனைவி நடத்தும் காதல் போராட்டம் தான் இந்த ரோஜா. இப்படத்தின் மூலம் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
சிறைச்சாலை
ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சிறைச்சாலை. ஆயுள் தண்டனை கைதிகளான மோகன்லாலும், பிரபுவும் சிறையில் இருந்து தப்பிக்க முயல்வதே இப்படத்தின் கதை. சிறைச்சாலையில் கைதிகள் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியது இப்படம்.
மதராசப்பட்டினம்
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து ஏ.எல்.விஜய் இயக்கிய திரைப்படம் தான் ‘மதராசப்பட்டினம்’. பிரிட்டிஷ் பெண்ணான எமி ஜாக்சன் தமிழ்நாட்டில் சலவைத் தொழில் செய்யும் ஆர்யா இடையேயான காதல் தான் படத்தின் மையக்கரு. சுதந்திரப் போராட்டத்தையும், சுதந்திரத்திற்குப் பிறகு தம்பதியருக்கு என்ன நடக்கிறது என்பதையும் அழகாக காட்சிப்படுத்தி இருந்தார் ஏ.எல்.விஜய்.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சலை ஓரம்கட்டி கயல்..! டி.ஆர்.பி-யில் இதுவரை எந்த சீரியலும் செய்யாத சாதனை.. கேக் வெட்டி கொண்டாட்டம்!